ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஊடகவியலாளர் மாநாடுகளில் பயன்படுத்தப்பட்ட பிரபல உத்தியோகபூர்வ டிஜிட்டல் திரையிலிருந்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உருவம் நீக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த திங்கட்கிழமை (15) முதல் பெரமுனவின் ஊடக சந்திப்புகளில் இத்திரை பயன்படுத்தப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.முன்னதாக, டிஜிட்டல் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதியும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதி அமைச்சரும் பெரமுனவின் முக்கியஸ்தருமான பசில் ராஜபக்ஷ ஆகியோரின் முகங்கள் சுழற்சி முறையில் காண்பிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது .
கொரோனா வைரஸ் தொற்று பரவல் எப்போது முடிவிற்கு வரும் என்பது இன்று பலர் மத்தியில் உள்ள கேள்வியாகும்.உலகம் முழுக்க கொரோனா பரவல் தொடர்ந்து வேகமாக பரவி வருகிறது. அதிகம் தடுப்பூசி ஏற்றப்பட்ட அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கூட கொரோனா பரவல் இன்னும் முடிவிற்கு வரவில்லை. உலகம் முழுக்க 192,848,567 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டெட்ராஸ் ஆதனாம் [Tudors Adhanom Ghebreyesus] இதற்கு பதில் அளித்துள்ளார்.4,142,769 பேர் இதுவரை கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். உலகம் முழுக்க தற்போது பல நாடுகளில் மூன்றாம் அலை, நான்காம் அலை கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,341,682 ஆக உயர்ந்துள்ளது.இந்த நிலையில், உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டெட்ராஸ் ஆதனாம் கொரோனா பரவல் தொடர்பாக அளித்துள்ள பேட்டியில், நான் ஒரு முக்கியமான அறிவிப்போடு உங்களை சந்திக்கிறேன். உலகம் முழுக்க கொரோனா பரவலை மொத்தமாக தடுக்க மக்கள் உதவ வேண்டும். கொரோனாவிற்கு எதிராக மக்கள் முறையாக செயல்பட்டால் புதிய அலைகளில் இருந்து உலக நாடுகள் தப்பிக்க முடியும என்று தெரிவித்துள்ளார்.புதியதாக தொற்றுக்குள்ளாவோரை வேகமாக கண்டுபிடிக்க வேண்டும். உடனே கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தி, அவர்களுக்கு உடனே சிகிச்சை அளிக்க வேண்டும். இதன் மூலம் கொரோனா மேலும் பரவுவது தடுக்கப்படும். வேகமாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரை கண்டுபிடிப்பதன் மூலம் கொரோனா சங்கிலியை உடைக்க முடியும்.
பயண கட்டுப்பாடு நீக்கப்படாவிட்டாலும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.மாத்தறை பிரதேசத்தில் நேற்று (23) நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலார்களை சந்தித்த உரையாற்றிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், சமீபத்தில் நடைபெற்ற கொவிட் செயலணி கூட்டத்தில் இதற்கான அனுமதி கிடைத்துள்ளது. இதற்கமைவாக மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகள் வரையறுக்கப்பட்ட வகையில் இடம்பெறும். பயண கட்டுப்பாடு நீக்கப்பட்டால் வழமை போன்று பொது போக்குவரத்து சேவைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
மக்களின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு வடமராட்சி கடல் பிரதேசத்தில் கடலட்டை தொழிலுக்கான அனுமதியை வழங்கியுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்களின் நல்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய தடைசெய்யப்பட்ட தொழில் முறைகள் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.வடமாராட்சி பிரதேச கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே குறித்த விடயங்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளன.கடற்றொழில் அமைச்சரின் யாழ். செயலகத்தில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர்,பிரதேச மக்களில் பெரும்பாலானவர்களின் கருத்தினை கடற்றொழிலாளர் சங்கங்கள் பிரதிபலிக்கின்றன என்ற வகையிலும், மக்களின் தற்போதயை பொருளாதார நிலைமையையும கருத்தில் கொண்டு, கடற்றொழில் திணைக்களத்தினால் வரையறுக்கப்படும் நிபந்தனைகளை பின்பற்றி கடலட்டை தொழிலில் ஈடுபடுவதற்கான அனுமதியை வழங்குவதாக தெரிவித்தார்.மேலும், மக்களின் நலன்களின் அடிப்படையிலேய தன்னுடைய தீர்மானங்கள் அமையும் என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர், வெளிச்சம் பாய்ச்சுதல் குலை போட்டுப் பிடித்தல் போன்ற தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளை முற்றாக தடை செய்வதற்கு கடற்றொழிலாளர் சங்கங்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.மேலும், கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகின்ற படகுகள் பதிவு செய்யப்படும் என்று வலியுறுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 40 குதிரைவலுவிற்கு உட்பட்ட இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டுமெனவும் தெரிவித்தார்.இன்றைய கலந்துரையாடலில் கடற்றொழில் திணைக்களத்தின் யாழ் மாவட்டப் பிரதாணி ஜெ. சுதாகரன் மற்றும் வடமாராட்சிப் பிரதேச கடற்றொழில் உத்தியோகஸ்தர்கள் ஆகியோருடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமாராட்சிப் பிரதேச நிர்வாக அமைப்பாளர் ஸ்ரீரங்கேஸ்வனும் கலந்து கொண்டிருந்தார்.