Added a news
வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணியில் கலந்து கொள்வதற்காக மட்டக்களப்பு நோக்கிச் சென்ற ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் யாழ். மாநகரசபை மேயர் வேட்பாளரான க.சிவாஜிலிங்கம் பயணித்த வாகனம் திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் சேருநுவர – மகிந்தபுர பகுதியில் வைத்து முச்சக்கர வண்டி ஒன்றுடன் இன்று காலை (07) மோதி விபத்துக்குள்ளானது. இதன்போது முச்சக்கர வண்டியை செலுத்திய ஜி.கே.எட்வின் (வயது 65) காயமடைந்துள்ள நிலையில் சேருவில வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் மூதூர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தற்போது திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Added a news
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸினால் சமர்ப்பிக்கப்பட்ட இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் இந்த முடிவு அவருக்கு அறிவிக்கப்பட்டது - ஜனாதிபதி ஊடகப் பிரிவு.
Added a news
நீர், மின்சாரம், பெற்றோல் மற்றும் துறைமுக தொழிற்சங்கங்களின் ஒன்றியங்கள் இணைந்து நாளை (08) தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ள நிலையில் அது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று (07) மத்திய செயற்குழு ஒன்றுகூடுகிறது.ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான மாதாந்த சம்பளம், ஏனைய கொடுப்பனவுகள் மற்றும் நாணயமற்ற கொடுப்பனவுகளை பெறுபவர்களிடமிருந்து 6 வீதம் முதல் 36 வீதம் வரை வருமான வரி அறவிடுவதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை இடைநிறுத்துமாறு கோரி இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
Added a news
பதின்மூன்றாம் திருத்தத்திற்கு மேலதிகமாக தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என பௌத்தப்பிக்குகள் கூட்டாக அறிவித்தனர்.தென்பகுதியில் உள்ள பௌத்த பிக்குகள் அடங்கிய சர்வமத குழு யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு வடபகுதியில் உள்ள சர்வமதத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினர்.கலந்துரையாடலுக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் சற்று முன்னதாக இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயேபௌத்தப்பிக்குகள் உட்பட சர்வமத தலைவர்கள், பதின்மூன்றாம் திருத்தத்திற்கு மேலதிகமாக தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என அறிவித்தனர்.பதின்மூன்றாம் திருத்தத்தை அமுல்படுத்தக் கூடாது என ஜனாதிபதிக்கு நான்கு பிரதான பௌத்த பீடங்கள் கூட்டாக கடிதம் எழுதியுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் பௌத்தப் பிக்குகளின் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.