Feed Item
·
Added a post to , எல

ராமாவதாரம் முடிய மூன்று நாள் தான் இருந்தது. அவரை ரகசியமாக சந்தித்துப் பேச எமன் வந்திருந்தான். அப்போது ராமர் லட்சுமணரை அழைத்து, "நாங்கள் பேசும் சமயத்தில் யாரையும் அனுமதிக்க வேண்டாம்,'' என்று கட்டளையிட்டார்.

அந்த சமயத்தில் கோபக்காரரான துர்வாச மகரிஷி ராமரைத் தரிசிக்க வந்திருந்தார். லட்சுமணர் துர்வாசரை உள்ளே அனுமதிக்க மறுத்தார். கோபம் கொண்ட மகரிஷி, "என்னை அனுமதிக்காவிட்டால் அயோத்தியேஅழிந்துபோக  சபித்து_விடுவேன்,'' என்று கூச்சலிட்டார். 

அயோத்திக்கு ஆபத்து நேருமே என்ற பயத்தில் லட்சுமணரும் மகரிஷிக்கு வழிவிட்டார். 

ஆனால் கட்டளையை மீறிய தம்பி லட்சுமணர் மீது ராமருக்கு கோபம் எழுந்தது.

நீ மரமாகப் போ' என்று சபித்தார். அதைக் கேட்டதும் லட்சுமணர் கண்ணீருடன், "அண்ணா.... தங்களின் சாபத்தை எண்ணி நான் வருந்தவில்லை. தங்களுக்கு சேவை_செய்யாமல் எப்படி_வாழ்வேன்?'' என்றார்.

லட்சுமணா! ்லாம் விதிப்படியே நடக்கிறது. சீதையை காட்டுக்கு அனுப்பிய பாவத்திற்காக நானும் பூலோகத்தில் 16 ஆண்டு அசைவின்றி தவ வாழ்வில் ஈடுபட வேண்டியிருக்கிறது. மரமாக மாறும் நீயே எனக்கு நிழல் தரும் பேறு பெறுவாய்,'' என்றார்.

அதன்படியே, திருச்செந்தூர் அருகிலுள்ள ஆழ்வார்திருநகரியில் நம்மாழ்வாராக ராமர் அவதரித்த போது, லட்சுமணர் புளியமரமாக நின்று சேவை செய்தார். இந்த மரத்தை "தூங்காப்புளி' என்பர். அதாவது, இதன் இலைகள் எப்போதும் மூடுவதே இல்லை. லட்சுமணன் ் இமைக்காமல்ராமரைப் பாதுகாப்பதாக ஐதீகம்.

  • 509