ஒரு மிகப்பெரிய ஞானியை பிரபு ஒருவர் தேடிவந்தார். “எனக்கொரு இறுதி வாசகம் எழுதித் தாருங்கள்," அதை மனதில் என்றென்றும் நிறுத்தி பொக்கிஷமாக பாதுகாப்பேன் என்றார்.
ஞானியும் மறுக்காமல் ஒரு சிறு துண்டில் ஒரு வாசகம் எழுதித்தர அதைப் படித்துப் பார்த்த பிரபு அதிர்ந்துவிட்டார்.
'அப்பனும் இறப்பான் பிள்ளையும் இறப்பான்
அதன் பின் பேரனும் இறப்பான்!'என்று எழுதி இருந்தது.
பிறந்தவர்கள் இறப்பார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், உங்களைப் போன்ற ஞானி மக்களுக்கு வரம் தருவதுபோல் வார்த்தை சொல்லாமல் சாபம் தருவது போல் அபசகுனமாகவா எழுதுவது?" என்று குமுறிய பிரபுவைப் பார்த்து ஞானி சிரித்தார்.
"இதுவா சாபம்? பெரிய வரமப்பா இது, நன்றாகச் சிந்தித்துப்பார் முதலில் அப்பன் இறப்பான் பிறகு பிள்ளை இறப்பான் பிறகு பேரன் இறப்பான். இதானே முறை, உன் பெற்றோரே தங்களது இறுதிச் சடங்கை நீ செய்ய வேண்டுமென்று தானே ஆசைப்படுவார்கள்? நீ மறைந்து உனக்கு உன் மகன் ஈம கடன்கள் செய்தால் அது இயல்பு. அதில்லாமல் நீ இருக்க அவன் மறைந்து அவனது இறுதிச் உங்குகளை நீ செய்ய நேரிட்டால் உனக்கு எப்படியிருக்கும்? அதுதான் சாபம். அப்படியானால் இது வரம் தானே? மரணம் என்பது இயல்பானது. அது இயல்பான முறையில் நிகழ்வதே வரம். இறையருள், சுபம் எல்லாமே."என்றார். பிரபு மனநிறையுடன் அதை கண்களில் ஒற்றிக் கொண்டு அவரிடம் ஆசி பெற்று சென்றார்.
ஞானியின் விளக்கம் கேட்ட பிரபு வாசகத்தை கண்ணில் ஒற்றிக் கொண்டார்.
- 335