Feed Item
Added a post 

ஒரு முறைதான், ஒரே ஒரு முறைதான், உங்கள் உலகத்தை மாற்றக் கூடிய ஒருவரைச் சந்திப்பீர்கள். வேறு ஒருவரோடும் பகிர்ந்து கொள்ளாத விஷயங்களை அவர்களிடம் சொல்வீர்கள்.

நீங்கள் சொல்வது போலவே அவர்களால் உள்வாங்கவும் முடியும். உங்களை முழுதாகக் கேட்க விரும்புவார்கள். உங்கள் எதிர்காலம், நிறைவேறாத கனவுகள், எட்ட முடியாத சிகரங்கள், வாழ்க்கை உங்கள் மீது வீசிய கொடும் கற்கள் என அனைத்தையும் அவர்களிடம் கொட்டித் தீர்ப்பீர்கள். உங்கள் வாழ்வில் எது நடந்தாலும், அவர்களிடம் சொல்வதற்காக காத்துக் கொண்டிருப்பீர்கள். உங்கள் பரவசத்தில் அவர்களும் பங்கு கொள்வார்கள். உங்களோடு அழவோ, உங்கள் முட்டாள்தனத்தைப் பார்த்து சிரிக்கவோ தயங்க மாட்டார்கள்.

உங்கள் உணர்ச்சிகளை அவர்களால் காயப்படுத்த முடியாது. உங்களை மதிப்பிட மாட்டார்கள். உங்களை வளர்த்தெடுக்க அனைத்தையும் செய்வார்கள். உங்களுக்கே தெரியாத உங்களை காண்பித்து, உங்களை அழகாக்குவார்கள். அவர்களின் அருகாமையில் ஒரு வித மன அழுத்தமோ பொறாமையோ இருக்காது.

காற்றில் அமைதியை தூவி இருப்பார்கள். அவர்கள் உங்களை உங்களாக நேசிப்பதால், நீங்கள் நீங்களாகவே இருக்கலாம்; எதைப் பற்றியும் கவலை கொள்ள தேவையில்லை. ஒரு வார்த்தை, ஒரு பாடல், கை கோர்த்து நடந்த நொடிகள் மிகவும் முக்கியமானதை உங்கள் இதயத்தில் வாழும். உங்கள் சிறு வயது ஞாபகங்கள் தெளிவாக மனதில் அலையடிக்கும். நீங்கள் குழந்தையாக மாறுவீர்கள்.

வண்ணங்கள் அழகாகவும் பிரகாசமாகவும் தெரியும். அதுவரை எப்போதாவது இருந்த சிரிப்பு, உங்கள் வாழ்வில் தினசரி வாழ்வில் மறுக்க முடியாத மறக்க முடியாத ஒரு நிகழ்வாக மாறிவிடும். ஒரு நீண்ட நாளில், களைத்துப் போகும் நேரத்தில், அவர்களது ஒரு குறுஞ்செய்தி, ஒரு அழைப்பு உங்கள் முகத்தில் சிரிப்பை வர வைக்கும். அவர்களுடைய இருப்பு அழகான திருப்தியைத் தரும். அவர்களோடு பேச வேண்டும் என்ற அவசியமே இல்லை. உங்களுக்கு ஆர்வமில்லாத விஷயங்கள் கூட அவர்களுக்குப் பிடிக்கும் என்ற ஒரு காரணத்தால் உங்களை பரவசமாக்கும்.

உங்கள் நாளின் ஒவ்வொரு நொடியிலும், உங்களின் ஒவ்வொரு செயலிலும் இவரின் நினைவு இருக்கும். நீல வானம், தென்றல், புயல் போன்றவற்றில் அவரைக் காண்பீர்கள். உங்கள் இதயம் என்றேனும் ஒரு நாள் உடைக்கப்படலாம் எனத் தெரிந்தும் அதை அவருக்குக் கொடுப்பீர்கள். அப்படி கொடுப்பதில் எல்லையற்ற ஆனந்தத்தைக் கண்டடைவீர்கள். உடைந்து போகலாம் எனத் தெரிந்து பின்புதான் உண்மையான மகிழ்ச்சியை அடைய முடியும். உண்மையான மகிழ்ச்சி உங்களை பயம் கொள்ளச் செய்யும்.

ஒரு உண்மையான நட்பு, உங்களுக்கு உண்மையாக இருக்கும் ஒரு பாதியாக அவர் இருக்கிறார் என்ற எண்ணம் உங்களுக்குத் துணையாக இருக்கும். வாழ்க்கை வித்தியாசமானதாக மாறி விடுகிறது. பரவசமாக. மகிழ்வாக. மதிப்புள்ளதாக. உங்களின் ஒரே நம்பிக்கை அவர்கள் உங்கள் வாழ்க்கையின் பிரிக்க முடியாத ஒரு பகுதி என்பதுதான்.

 -பாப் மார்லே

  • 643