Feed Item
Added a post 

உங்களுடைய பிறந்த ஜாதகத்தில் சுக்கிர பகவானுடன் ராகு சேர்ந்து இருக்கிறதா ? அல்லது செவ்வாய் பகவானுடன் ராகு சேர்ந்திருக்கிறதா? அல்லது உங்கள் லக்னத்திற்கு ஏழாம் இடத்தில் அதிபதியாக எந்த கிரகம் வந்தாலும் அந்த கிரகத்துடன் சேர்ந்து ராகு பகவான் சேர்ந்து இருக்கிறாரா ?

ஆமாம் என்றால் உங்களால் தாங்க முடியாத சோகங்கள் & அவமானங்கள் உங்கள் வாழ்க்கையில் சில காலம் வரும்!

அப்படி வராமல் இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமாவது ஒடுக்கத்தூர் மகான் சன்னதிக்கு சென்று அன்னதானம் செய்யுங்கள் .அல்லது அன்னதானம் செய்ய தேவையான உணவு பொருட்களை இங்கே உள்ள நிர்வாகிகளிடம் ஒப்படையுங்கள்.அது உங்கள் பிறந்த நாள் அல்லது ஜென்ம நட்சத்திர நாளாக இருக்கலாம் .

இதை செய்ய இயலாதவர்கள் ஒரு மணி நேரம் அவர் சன்னதியில் தியானம் செய்யுங்கள், இதன் மூலமாக உங்களுக்கு வரக்கூடிய தாங்க முடியாத சோகங்கள் அவமானங்கள் நெருங்காது .

கடந்த 10 ஆண்டுகளாக இதை அனுபவத்தில் உணர்ந்து அதன்பிறகு ஒடுக்கத்தூர் மகானில் ஆசீர்வாதம் மற்றும் அனுமதியோடு இதை உங்களுக்கு தெரிவிக்கின்றோம்.

ரத்தினபுரி என்ற வட மாநில ஊரில் லோகையா நாயுடு பாலாம்பிகை தம்பதிக்கு மகனாக பிறந்தவர் ஒடுக்கத்தூர் மகான் ஆவார். சேஷயா இவருக்கு பெற்றோர்கள் இட்ட பெயராகும் .இவர் பல ஆண்டுகளாக தவம் செய்து ஏராளமான மக்களுடைய கர்ம வினைகளை தீர்த்து வைத்திருக்கின்றார்.

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு மகான்களுக்கு முக்தி தரக்கூடிய அளவுக்கு வழிகாட்டும் நவநாத சித்தருக்கு இணையான மகானாக வாழ்ந்தார்.

சித்தர்களின் பல்வேறு பகையான பிரிவுகள் உண்டு. சித்தர்களின் நீதிபதிக்கு இணையானவர்கள் நவநாத சித்தர்கள் ஆவார்கள்.

மதனப்பள்ளி ஒடுக்கத்தூர் பெங்களூர் கொண்டித் தோப்பு புனே முதலிய இடங்களில் ஒடுக்கத்தூர் மகான் அவர்களுடைய சமரச சன்மார்க்க பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதில் பெங்களூரில் உள்ள ஒடுக்கத்தூர் ஜீவசமாதி மிகச் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று கொண்டு இருக்கின்றன.

கடந்த 25 ஆண்டுகளாக இதன் செயலாளராக அரும் பெரும் பணிகள் செய்தவர் திரு. ராஜபாதர் முதலியார் ஆவார்.

பல ஆண்டுகளாக அருணாச்சல பிள்ளை என்பவருக்கு இருந்து வந்த வயிற்று வலி நோய் ஒடுக்கத்தூர் மகான் சுவாமிகள் தரிசனத்தாலும் ஸ்பரிசத்தாலும் நீங்கிவிட்டது.

அல்சூர் பகுதியைச் சேர்ந்த நாகாபாய் அம்மாள் ,மீனாட்சி அம்மாள்

குடியாத்தம் என்ற ஊரை சேர்ந்த முனிசாமி நாயுடு,சுப்பா நாயுடு

புங்கனூர் சமஸ்தானம் துறை பசவ ராஜா

வீர சைவ சித்தலிங்கப்பா

நாராயணசாமி செட்டியார்

கருப்பண்ண செட்டியார்

அருணாச்சலம் பிள்ளை போன்றவர்கள் இவருக்கு ஏராளமான பணிவிடை செய்து சீடர்களாக இருந்து இவரின் புகழை பரப்பியவர்கள்.

இவரது காலத்தில் இவரை புகைப்படம் எடுக்க பலர் முயற்சி செய்தார்கள்.

ஆனால் யாருடைய கேமராவிலும் இவருடைய உருவம் பதிவாகவில்லை.

அல்சூர் பகுதியைச் சேர்ந்த திருவாளர் பழனிவேலு முதலியார் என்பவர் சுவாமிகளின் மீது தீராத பாசத்தோடு வாழ்ந்து வந்தவர். அவர் அனுமதியோடு ஒரே ஒருமுறை எடுத்த புகைப்படம் தான் இன்று உலகம் முழுவதும் பரவி இருக்கின்றது.

இந்த படத்தை அச்சடித்து உங்களுடைய வீட்டில் வைத்து தினமும் ஓம் ஸ்ரீ ஒடுக்கத்தூர் மகான் நமக என்று ஜெபம் செய்து வரலாம்.

ஒடுத்தூர் மகான் அவர்களை தரிசனம் செய்து ஞானம் பெற்ற துறவிகள் ஏராளமானவர்கள் உண்டு .அவர்களில் அத்வைத ஞானி அருள் திரு வையாபுரி சுவாமிகள் ஓமா நகர் அருள் சித்தர் துடைத்தட்டி அருணாச்சல சுவாமிகள் பழனி அற்புத வனார் மதுரை சட்டி சாமிகள் தவத்திரு செல்லப்ப சுவாமிகள் ஸ்ரீமத் நாராயண சுவாமிகள் போன்றவர்களை குறிப்பிடலாம்.

ஓடுக்கத்தூர் மகான் ஆனந்த வருடம்,தை மாதம் சுவாதி நட்சத்திரம் அன்று 16.2.1915 ஆம் தேதியில் பரிபூரண சமாதி ஆனார்.

  • 477