Feed Item
Added a post 

முள்ளங்கி சாப்பிடுவதால் செரிமானம், மலச்சிக்கல், நீரிழிவு, சிறுநீரகப் பிரச்சனைகள், மூலம், கல்லீரலை சுத்தம் செய்தல், எலும்பு பலப்படுதல் என பல நன்மைகள் கிடைக்கும். மேலும், இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், புற்றுநோய் போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.

செரிமானம்:

  • முள்ளங்கியில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், செரிமான அமைப்பை சீராக வைத்திருக்க உதவுகிறது.
  • முள்ளங்கியை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், அதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து, செரிமான செயல்பாட்டை மேம்படுத்தி, மலச்சிக்கல் பிரச்சனையைத் தடுக்கிறது.
  • மேலும் இது பித்த நீர் உற்பத்தியை சீராக்குகிறது, கல்லீரல் மற்றும் பித்தப்பையை பாதுகாக்கிறது. மேலும் உடலில் நீர்தேக்கமடைவதைத் தடுக்கிறது

கல்லீரல்:

  • முள்ளங்கி கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்கக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த காய்கறியாகும். அவற்றில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால்,
  • கல்லீரலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. மேலும், முள்ளங்கியில் உள்ள என்சைம்கள் கல்லீரலில் கொழுப்பு படிவதைத் தடுக்கவும் உதவுகிறது.
  • எனவே முள்ளங்கியை அடிக்கடி சாப்பிடுவதால், கல்லீரலில் உள்ள நச்சு நீக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும் மற்றும் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி:

  • வைட்டமின் சி நிறைந்த முள்ளங்கி ஆனது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
  • இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆனது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ப்ரீ ராடிக்கல்களால் ஏற்படும் சேதத்தை தடுக்கிறது மற்றும் நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.
  • முள்ளங்கியை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், அது நெஞ்சில் தேங்கியுள்ள சளியை முறித்து, உடனடி நிவாரணத்தைத் தருவதுடன், உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

உடல் எடையை குறைக்க:

  • முள்ளங்கியில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது.
  • எனவே இதை அடிக்கடி தங்களின் உணவில் அதிகமாக சேர்த்து சாப்பிட்டு வந்தால், உடல் எடையை விரைவில் குறையும். முள்ளங்கியில் உள்ள அதிக நீர் மற்றும் நார்ச்சத்து வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும்.
  • இதனால் எடை குறைக்க உதவுகிறது.

வீக்கத்தை எதிர்த்துப் போராடுகிறது:

  • முள்ளங்கியில் அந்தோசயினின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால் வீக்கம் மற்றும் மன அழுத்தத்தை எதிர்த்துப் போராடுகின்றன.
  • மேலும் இது மூட்டுவலி மற்றும் பிற இன்ஃபிளமேட்டரி போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
  • 583