......
தென்னிலங்கை அரசியல் தலைமைக்கு சோரம் போகும் கட்சியுடன் தொடர்ந்தும் பயணிப்பதை விடுத்து மக்களின் நலனை முன்னிறுத்தி பயணிக்கும் தரப்பினருடன் அரசியல் பயணத்தை தொடரவிருப்பதாக சுட்டிக்காடியுள்ள கனகரட்ணம் விந்தன் தற்போதைய அரசு, படுகொல்லப்பட்ட உறவுகளுக்கு தீர்வு பெற்றுத்தர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமைத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் -
தற்போதைய அரசு ஆட்சியை பிடிப்பதற்காக கூறிய உறுதிமொழிகளான பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும், அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும், வாடக்கு கிழக்கு இணைத சுயாட்சி உள்ளிட்ட பாகுபாடற்ற தீர்வுகளை வழங்க வேண்டும்.
வடக்குக்கான நிதி மேலதிகமாக கிடைத்துள்ளதை கூறி ஆட்சியாளர்களுக்கு கைக்கூலியாக இருப்பவர்களாகவே சிலர் இருந்து வருகின்றனர்.
மக்களின் வாழ்வை பகடையாக வைத்து தமது சுயநலன்களுக்காக சோரம் போய் பின்கதவால் தென்னிலங்கை அரசுகளுடன் கூடிக்குலாவும் கட்சியுடன் தொடர்ந்து இருப்பதற்கு நாம் விரும்பவில்லை.
நான் தமிழரசுக் கட்சியில் இணைந்தது முதல் இவ்வாண்டுவரை கிட்டத்தட்ட 40 வருடங்களாக ரெலோவில் பல பொறுபுகளில் இருந்து செயலாற்றினேன்.
தமிழ் அரசியல் பரப்பில் தேசியம் பேசி மக்களை ஏமாற்றி வாக்கு சுவீகரிக்கும் என்சார்ந்த ரெலோ கடந்த ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு சோரம்போய் தமிழ் வேட்பாளரை தோற்கடித்தனர்.
அபிவிருத்தி என்னும் பெயரில் பல கோடிகளை ஏப்பமிடுள்ளனர்.
குறிப்பச்க சர்வதேச நாணய நிதியத்தின் பணத்தில் இருந்தே ரணிலிடமிருந்து கையூட்டல் பெற்றனர்
சம்பந்தன் காலத்திலும் இவ்வாறு பல கோடிகளை பெட்டி பெட்டியாக பெற்றிருந்தனர்.
இதற்கான ஆவணங்களும் இருக்கின்றன.
பின்கதவால் அரசியல் வாதியாக நாம் செயற்பட விரும்பவில்லை.
தமிழ் மக்களின் ஒற்றுமையை வளர்க்கவென கட்டிய சங்கு சின்னத்தை சிதைத்தவர்கள்.
நான் சார்ந்த கட்சி ரெலோவாக இருக்கும் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் உள்ளிட்ட பல ஆயிரம் மக்களை கொன்று சூறையாடிய கட்சி அனுர தலைமையிலான வடக்கு கிழக்கை நிரந்தரமாக பிரித்த கட்சிக்கு கையுயர்த்தியது ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழீழம் கேட்டோம் சுய உரிமை கேட்டோம் அனைத்தையும் இழந்தோம். இன்று வடக்குக்கு கூடுதல் நிதி ஒதுக்கியது என்று கூறி அக்கட்சிக்கு ஒத்தூதுகின்றீர்கள்.
எமது தமிழ் பத்திரிகையாளர்கள் பலபேர் கொலை செய்யப்பட்டு இதுவரை தீர்வு கிடைகவில்லை. ஆனால் தமது உறுப்பினர்கள் பாதிக்கப்பட்ட
பட்டலந்த விவகாரத்துக்கு ஆணைக்குழு அமைக்கின்றார்கள்.
அநுர அரசு நாட்டையும் மக்களையும் சமமாக நேசிப்பதாக இருந்தால் வடக்கு கிழக்கில் இறந்த ஊடகவியலாளர் களுக்கும் முள்ளிவாய்க்கால் பலிகளுக்கு, அடாத்தான ஆக்கிரமிப்புக்கள், போன்றவற்றுக்கும் நீதி தாருங்கள் என்றும் வலியுறுத்தினார்.
- 161