அசுர குலத்தில் பிறந்த சுவர்பானு எனும் அரக்கனின் தலைப்பகுதியே ராகு ஆவார். சூரியனையும், சந்திரனையும், ஏனைய கிரகங்களையும் விழுங்கும் தன்மை கொண்டவர் ராகு.
திருப்பாற்கடலில் அமுதத்தினை எடுக்க தேவர்கள் வரிசையில் சுவர்பானுவும் தேவர்களைப் போல மாறுவேடத்தில் இருந்து அமுதத்தை உண்டமையால் அழியாத வரம் பெற்றார் சுவர்பானு.
இதனை சூரியனும் சந்திரனும் விஷ்ணுவிடம் கூறியமையால் விஷ்ணுவின் சுதர்சன சக்கரத்தால் இரு கூறுகளாக பிளக்கப்பட்டு மாயபிம்பங்களாக ராகு கேது என்று அழைக்கப்பட்டார்கள்.
ராகு மாய இருள் கிரகம். ராகுவிடம் பிடிபடும் அனைத்து கிரகங்களும் தன் பலத்தை முழுமையாக இருக்கும். அவ்வளவு வல்லமை வாய்ந்த ராகு நிழல் உருவத்தில் ஒருவரை பின்தொடர கூடியவர்.
ராகுவே தந்தை வழி முன்னோர்களின் கர்ம காரக கர்த்தராக செயல்படுகிறார். ராகு சுக்கிரனை போல அசுர குணம் கொண்டவர். ஒருவரை யோகத்தை கொடுத்து அவரை பிரபலப்படுத்தி சரிய வைப்பது ராகுவே.
ஒருவர் ஜாதகத்தில் ராகு மற்றும் வலிமை பெற்றிருந்தால் தந்தையாலும், தந்தை வழி உறவுகளாலும், தந்தை வழி முன்னோர்களாலும் அன்பையும், பேரையும் புகழையும் ஜாதகர் பயன்படுத்தி வாழ்வார்.
அதே ராகு வலிமை இழந்து இருந்தால் தந்தையாலும், தந்தை வழி உறவாலும், தந்தை வழி முன்னோர்களாலும் எந்த ஒரு பயனும் இல்லாமல் தவிக்கும் நிலையை தந்து வாழ்வின் நிலையை சரிய வைத்து விடுவார்.
ராகு வேகமாக செயல்படக்கூடிய கிரகம். ஒரு கிரகத்தின் பலனை வேகமாக உறிஞ்சி தன் பலத்தை அதிகரித்துக் கொள்ளும் தன்மை படைத்த ராகு, ஒருவருக்கு யோகம் தர கடமைப்பட்டவராக ஜாதகத்தில் ராகு அமர்ந்தால் அவரது வளர்ச்சி மிக வேகமாக இருக்கும்.
ராகு ஒரு ஜாதகரை எந்தெந்த வழியில் வெளி உலகத்திற்கு கொண்டு வருகிறார் என்பதை காண்போம்.
ஒருவர் சினிமா துறையிலும்(புதுமுக நடிகர்), எதிர்ப்பாராத பணவரவு (லாட்டரி டிக்கெட்), புதையல் யோகமும், இணையதளம் சார்ந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலமும் (Facebook, Instagram, YouTube), டிரான்ஸ்போர்ட், பலபலத் தொழில் நிறுவனங்களை முதலீடு செய்தல்,(shares, partnership) இது போன்ற பல துறைகளில் ராகுவின் அதீத பலன்களை பெற்ற நபர்களாக இருப்பார்கள்.
ஒருவர் ஜாதகத்தில் ராகுவிற்கு வீடு கொடுத்தவர் லக்னத்திற்கு 1-5-9 அதிபதியாக இருந்தாலும், 3-6-8-12 இடங்களில் மறைந்தாலும், செவ்வாய், சனி, குரு போன்ற கிரகங்கள் வக்கிர நிலையில் ராகு இருந்தாலும் தனது திசையில் யோகத்தையும், தொழில் யுக்தியையும் ஜாதகருக்கு நிச்சயம் வெளிக்கொண்டுவந்து காட்டுவார்.
(ராகு தரும் யோகத்திற்கு வயது வரம்பு என்பது கிடையாது. சிறுவயதில் திசை வந்தாலும் யோகத்தை தரும்.)
ஒருவராகு திசையில் அதீத கஷ்டங்களையும், கடன் நெருக்கடிகளையும், உடல் உபாதைகளையும், மன கஷ்டங்களையும், மன அழுத்தங்களையும், கொண்டுள்ள அன்பர்கள். முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய தர்ப்பணங்களை முறைப்படி செய்து வழிபாடு செய்வதன் மூலம் ராகுவின் தோஷங்களில் இருந்து விடுபடலாம்.
உடல் ஊனமுற்றவர்களுக்கும் ஆதரவற்றவர்களுக்கும், ஊனமுற்ற முதியவர்களுக்கும் உங்களால் இயன்ற அளவுக்கு உதவிகள் செய்து வர ராகுவால் வரக்கூடிய கெடுபலன்கள் குறையும். ஞாயிற்றுக்கிழமை ராகு கால நேரங்களில் துர்க்கை அம்மனுக்கும் அல்லது காலபைரவர்க்கும் மிளகு தீபமேற்றி வழிபாடு செய்து வர ராகுவின் கெடு பலன்கள் குறையும்.
- 430