வாழ்க்கையே மாற்றும் சிவ மந்திரங்கள் மிக மிக சக்தி வாய்ந்தவையாகும். இந்த மந்திரங்களை சொல்ல சொல்ல சிவனின் அருளையும், சிவனையும் நமக்குள் உணர முடியும்.
நம்முடைய தினசரி வாழ்க்கையில் சிவனின் நினைவால், அவரின் மந்திரங்களை சொல்லிக் கொண்டே ஒவ்வொரு செயலையும் செய்யும் போது வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்படுவதை கண் கூடாக காண முடியும்.
மந்திரங்களில் முதன்மையானதும், மிக பழமையானதுமாக சொல்லப்படுவது காயத்ரி மந்திரம். ஆனால் அதை விடமும் பழமையான மந்திரமாகவம், மிகவும் சக்தி வாய்ந்த மந்திரமாகவும் சொல்லப்படுகிறது பஞ்சாட்சர மந்திரமான, "ஓம் நமசிவாய" என்ற ஐந்தெழுத்து மந்திரம் தான்.
இதற்கு சிவனை உன்னை வணங்குகிறேன் என்பது தான் பொருள். இந்த மந்திரத்தை இன்னும் ஆழமாக சென்று பார்த்தால் பல விதமான அர்த்தங்கள் சொல்லப்படுகிறது. அதாவது, சிவன் என்ற சொல்லுக்கு ஆனந்தம் அளிப்பவன் என்று பொருள்.
அனைத்து விதமான ஆனந்தத்தையும் அளிப்பவனை வணங்குகிறேன் என்பது இந்த மந்திரத்திற்கு பொருளாக கொள்ளலாம்.
சிவ பெருமானே அனைத்து உலங்களுக்கும் தலைவனாகவும், ஆதியும் அந்தமும் இல்லாமல் அனைத்து இடங்களிலும், அனைத்துமாகவும் நிறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
ஆரம்பமும் முடிவும் இல்லாதவனை வணங்குகிறேன், அனைத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளை வணங்குகிறேன் என்பது உள்ளிட்ட பல அர்த்தங்கள் இந்த மந்திரத்திற்கு சொல்லப்படுகிறது.
இது தவிர இன்னும் எத்தனையோ மந்திரங்கள் சிவனின் அருளை பெறுவதற்காக உள்ளன. இவற்றின் நம்முடைய தினசரி வாழ்க்கையில் எந்த நேரத்தில், எந்த மந்திரத்தை சொன்னால் சிவனின் அருளால் நம்முடைய வாழ்க்கையே மாறும் என்பதை நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தினமும் சொல்ல வேண்டிய தமிழ் சிவ மந்திரங்கள் :
காலையில் எழுந்ததும் சொல்ல வேண்டிய மந்திரம் :
அண்ணாமலை எம் அண்ணா போற்றி கண்ணார் அமுதக் கடலே போற்றி
குளிக்கும் போது சொல்ல வேண்டியது :
சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி
கோபுர தரிசனம் காணும் போது சொல்ல வேண்டியது :
தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
வீட்டைவிட்டு வெளியில் செல்லும் போது சொல்ல வேண்டியது :
காவாய் கனகக் குன்றே போற்றி ஆவா எந்தனக்கு அருளாய் போற்றி
நண்பரைக் காணும் போது சொல்ல வேண்டியது :
தோழா போற்றி துணைவா போற்றி
வீட்டின் கதவை திறக்கும் போது சொல்ல வேண்டியது :
வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி
நிலத்தில் அமரும் போது சொல்ல வேண்டியது :
பாரிடை ஐந்தாய் பரந்தாய் போற்றி
நீர் அருந்தும் போது சொல்ல வேண்டியது :
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
அடுப்பு பற்ற வைக்கும் போது சொல்ல வேண்டியது :
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
உணவு உண்ணும் போது சொல்ல வேண்டியது :
தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்றெனக்கு ஆரமுதம் ஆனாய் போற்றி
மனதில் அச்சம் ஏற்படும் போது சொல்ல வேண்டியது :
அஞ்சேல் என்றிங்கு அருளாய் போற்றி
உறங்கும் போது சொல்ல வேண்டியது :
ஆடக மதுரை அரசே போற்றி
கூடல் இலங்கு குருமணி போற்றி
- 681