Feed Item
Added a post  to  , தந

அர்ச்சுனா!

ஜெயத்ரதனின் தலை கீழே விழக்கூடாது! அவனுடைய தலை யாரால் பூமியில் வீழ்த்தப்படுகிறதோ அவன் தலையும் நூறு துண்டுகளாய் உடைந்து விழும்!!

இப்படியொரு வரத்தினை அவன் தந்தை அளித்து இருந்தார்!!

அவன் தலை உன்னால் வீழ்த்தப்பட்டதால் உன் தலையும் வெடித்துச் சிதறும்!!

என்ன கண்ணா பயமுறுத்துகிறாய்? இப்போது என்ன செய்வது?

ஜெயத்ரதனின் தந்தை வ்ருத்தஷத்ரன்! அவன் #தியானத்தில் இருக்கிறான்!

அவன் மடியில் இந்தத் தலைவிழும்படி உன் கணைகளால் அனுப்பி வை!!

இதனால் நான் எப்படிக் காக்கப்படுவேன் கண்ணா?

அவனது தந்தை தியானத்தை முடித்து எழுந்தால் அந்த தலையானது அவன் மடியிலிருந்து விலகி பூமியில் விழுந்துவிடும்!!

இப்போது அந்த தலை நிலத்தில் விழ யார் காரணம்?

அவன் ்தையே ஆவான்! அவனது தலையும் வெடித்துச் சிதறும்!

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!

சொன்னபடி செய்தது அர்ச்சுனனின் காண்டீபம்!

தந்தையும், மகனும் ஒன்றாய் முடிந்தார்கள்.

சூரியனை அஸ்தமனமாக்கி ஜெயத்ரதனை சதியால் கொன்றது கண்ணனே!

கௌரவர்கள் உணர்ந்தனர்!! ஆனால் யாரும் வாய் திறக்கவில்லை!!

ஜெயத்ரதனின் மரணம் குறித்து எந்தக் கண்டனமும் எழவில்லை!!

போர் தொடர்ந்தது!

பயத்தால் இறந்தது கௌரவ சேனை!! அந்த யுத்தக் களம் அன்று ஒன்றை உணர்த்தியது!!

கண்ணனை வெல்ல முடியாது!! அவன் தர்மத்தின் #சொரூபம்!!

அதர்மமே நிறைந்திருக்கும் கௌரவர்களிடம் அவன் அதர்மமாய் நடப்பதும் தர்மமே!!

சஞ்சயனும் அதனையே சொன்னான்!!

திருதராஷ்டிரனும் ஒத்துக் கொண்டான்!!

சஞ்சயனே!

என் மருமகன் வீழ்ந்தானா? மன்னவா! வீழ்ந்தவன் உன் மருமகன் என்பதைவிட எழுந்தது இன்று தர்மமே!!

உயிருக்கு பயந்து காலையில் இருந்து வெளிவரவில்லை!!

எத்தனைப் பாதுகாப்பு அரண்கள்!! எல்லாம் சிதறிப்போய் ஜெயத்ரதன் அழிந்தான் என்றால் தர்மம் நிலைக்கும் என்பதே சத்திய வாக்காகிறது.

  • 557