இது சுந்தர் பிச்சை அவர்கள் கூறிய யோசனை.
தன் வாழ்வில் நிகழ்ந்ததை பற்றி இக்கேள்விக்கு விடையளித்துள்ளார்.
நான் ஒருமுறை விடுமுறை நாளில் ஒரு குளம்பியகம் (Cofee shop) சென்றிருந்தேன்.
காபி குடித்துக் கொண்டு இருந்த போது எதிர்பாராமல் எங்கோ இருந்து திடீரென பறந்து வந்த கரப்பான்பூச்சி அங்கிருந்த ஒருவர் மீது அமர்ந்தது.
அவர் அதை தட்டி விட்டார்.
பின்னர் அது ஒருவர் மீது ஒருவராக சென்று அமர ஒவ்வொருவரும் தட்டி விட்டனர்.
அப்போது அந்த அறையிலிருந்த ஒரு பெண் மீது அமர அவர் பதட்டத்தில் கத்தி விட்டார்.
இதனால் அந்த அறையே சிறிது நேரம் சலசலப்புடன் காணப்பட்டது.
அவர் பதட்டத்தால் உடல் நடுங்க அந்த உயிரினம் பறந்து சென்று அந்த கடையின் பணியாளர் ஒருவர் மீது அமர்ந்தது.
அவர் பதட்டப்படவில்லை.
நிதானித்தார்.
உயிரினத்தின் நடமாட்டத்தை கண்காணித்தார்.
அது ஓரிடத்தில் நின்ற போது அதை பிடித்து சாளரம் (ஜன்னல்) வழியே வெளியில் வீசி எறிந்தார்.
அப்போது என் மனதில் ஒரு கேள்வி எழுந்தது.
அந்த பெண்களின் இந்த செய்கைக்கு அந்த உயிரினம் தான் காரணம் என்றால் ஏன் அப்பணியாளர் பதட்டமடையவில்லை?
அப்போதுதான் எனக்குள் ஒன்று புரிந்தது.
நமக்கு பிரச்சினைகள் வரும்போது அதைக் கண்டு பயப்பட கூடாது.
பதட்டமடையாமல் அடுத்து என்ன செய்யலாம்? என யோசித்தால் வழி கிடைக்கும்.
சிக்கலான சூழ்நிலையில் பதட்டப்படாமல் நிதானமாக சிந்தித்தால் அதிலிருந்து விடுபட வழிகள் பிறக்கும்.
எனவே எந்த சூழலிலும் பதட்டப்படக் கூடாது.
- 658