Feed Item

தேவலோக வளம் தரும் நிறைபணி உற்சவம்..! திருவாரூர் தியாகராஜர் ஆலயத்தில் புரட்டாசி மாதம் பூரட்டாதி நட்சத்திரத்தில் நடைபெறும் விழா ...

தியாகராஜர் ஆலயத்தில் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் நிறைபணி உற்சவ விழாவில் ஆலய மூலஸ்தான பிரகாரம் தேவலோகம் போல் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றும். ஆண்டு தோறும் நடைபெறக்கூடிய நிறை பணி

விழாவானது புரட்டாசி மாதம் பூரட்டாதி நட்சத்திர தினத்தில் மாலை சாயரட்சை வேலையில் இவ்வாலயத்தில் மட்டும் நடைபெறக்கூடிய பிரத்தியோக விழா.

நிறைபணி விழா என்பது தேவலோகத்தில் உள்ள தேவேந்திரன் பூலோகத்தில் திருவாரூரில் அருள்பாலிக்கும் தியாகராஜ சுவாமியை வழிபட வேண்டுவதாகவும், அதற்கு தியாகராஜ சுவாமி புரட்டாசி மாதம் பூரட்டாதி நட்சத்திர நாளில் சாயரட்சை காலத்தில் மட்டும் வழிபட அனுமதித்ததாக புராணம் கூறுகிறது.

இந்த ஐதீகத்தின் படி நிறைபணி நாளான புரட்டாசி மாத பூரட்டாதி நட்சத்திர தினத்தில் பூலோகத்திற்க்கு தேவேந்திரன் வருவதற்கு ஏற்ப தேவலோகம் போன்று தியாகராஜ சுவாமி அருள்பாலிக்கும் மூலஸ்தான பிரகாரம் முழுவதும் வண்ண வண்ண புடவைகளாலும், பழங்கள், காய்கறிகள், வாழைமரம், தோரணங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தன. சாயரட்சை காலமான மாலை 6 மணிக்கு ஸ்ரீதியாகராஜ சுவாமிக்கு விஷேச பூஜைகளும், இரவு முகுந்தா சகஸ்ரநாம அர்ச்சனையும் நடைபெறும்..

ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் நடைபெறும் நிறைபணி விழாவில் பங்கேற்று ஸ்ரீதியாகராஜ சுவாமியை வழிபட்டால் தேவலோகத்தில் கிடைப்பதை போன்று அனைத்து வளங்களும் பெற்று இன்புற்று வாழ்வாங்கு வாழலாம் என்பது ஐதீகம்.

இந்த ஆண்டு 15-10-2024. செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு பூரட்டாதி நட்சத்திர நாளில் நடைபெறுகிறது ..

  • 1517