வேலன் மலை அடிவாரத்தில் உள்ள கிராமத்தில் வாழ்ந்து வந்தார்.
அவர் இறை பக்தி உடையவர்.
மரங்களை வெட்டி நன்றாக சம்பாதித்து வந்தார்.
கையில் நிறைய பணம் சேர்ந்தது.
ஒரு நாள் வேலன் மரங்களை எல்லாம் வெட்டிவிட்டு தனது மதிய நேர உணவை ஆற்றோரமாக இருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அவர் முன்னங்கால்கள் இல்லாத ஒரு குள்ளநரியை பார்த்தார்.
மிகவும் பரிதாபப்பட்டார்.
இரண்டு கால்கள் தான் அந்த குள்ளநரிக்கு உள்ளது.
அது எப்படி வேட்டையாடி சாப்பிடும் என எண்ணி வருந்தினார்.
அப்போது அங்கே ஒரு புலி உறுமும் சத்தம் கேட்டது.
அந்த சத்தத்தை கேட்ட வேலன் பயந்து மரத்தின் மேல் ஏறி ஒழிந்து கொண்டார்.
புலியை உன்னிப்பாக கவனித்தார்.
புலி ஒரு மானை பிடித்து வந்து சாப்பிட்டு விட்டு மீதியை அப்படியே விட்டு சென்றது.
அதனை கண்ட குள்ளநரி மெதுவாக தவழ்ந்து சென்று புலி மிச்சம் வைத்துச் சென்ற மானை புசிக்க ஆரம்பித்தது.
மரத்திலிருந்து வேலன் சந்தோஷப்பட்டார்.
இறைவன் என்னதான் குள்ள நரியை கால் இல்லாமல் படைத்தாலும் அதற்கு சாப்பாட்டை ஏற்படுத்திக் கொடுத்தாரே என்று நினைத்து மகிழ்ந்தார்.
அவர் உடனே குள்ளநரிக்கே இறைவன் சாப்பாட்டை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.
அப்படி என்றால் எனக்கு மிகுந்த இறை நம்பிக்கை உள்ளதால் எனக்கும் அவ்வாறே உணவளிப்பான் என்று எண்ணினார்.
நாம் ஏன் இவ்வளவு கஷ்டப்பட வேண்டும் என்று நினைத்தார் வேலைக்குப் போகாமல் வீட்டிலேயே தங்கினார்.
இறைவனை தொழுதுவிட்டு வீட்டு வாசலிலேயே இருந்தார் .
நாள் போகப் போக இளைத்துப் போனார்.
சில பேர் அவருக்கு சாப்பாடும் எடுத்து வந்து கொடுத்தார்கள்
சில நாள் கழித்து வேலன் சலித்துக் கொண்டார்.
ஏன் என்னை கடவுள் கண்டு கொள்ளவே இல்லை என வேதனை பட்டார்.
காலில்லாத நரிக்கு கூட சாப்பாடு போட்டாய் ஏன் என்னை கண்டுகொள்ளாமல் இருக்கிறாய் என இறைவனிடம் மன்றாடினார்.
மிகவும் மன்றாடி அழைத்ததால் கடவுள் உடனே காட்சி தந்தார்.
வேலன் அவரிடம் கேட்டார் ஏன் கடவுளே காலில்லாத நரிக்கு கூட உணவு வழங்குகிறீர்கள் நீங்கள் படைத்த எல்லாவற்றுக்கும் உணவளிப்பீர்கள் என்ற நம்பி இருந்தேனே ஏன் என்னை கண்டு கொள்ளவே இல்லை என்றார்.
கடவுள் பதிலளிக்கிறார் ஆம் நான் எல்லோருக்கும் தகவல் கொடுத்துக் கொண்டே இருக்கிறேன்.
உனக்கும் தகவல் கொடுத்தேன். ஆனால் நீ புலியைப் பார்த்து கற்றுக் கொள்ளாமல் நரியை பார்த்து வாழ பார்க்கிறாய்.
புலி சாப்பிட்டுவிட்டு மிகுதியை தேவையானவர்களுக்கு கொடுத்தது எனவே அதை பார்த்து கற்றுக் கொள் என்றார் கடவுள்.
அதாவது நம் வாழ்வில் பல குள்ள நரிகளையும் பல புலிகளையும் பார்க்கின்றோம்.
புலியின் சிந்தனைக்கும் குள்ளநரியின் சிந்தனைக்கும் வித்தியாசம் உள்ளது.
அவரவர் சிந்தனைக்கு ஏற்ப அவரவர் செயற்பாடுகள்.
இதே போல் நம்மைச் சுற்றியும் நிறைய குள்ள நரிகளும் நிறைய புலிகளும் இருக்கின்றன. நாம் எதைச் செய்கிறோம் என்பதில் தெளிவாக இருந்தால் எல்லாவற்றிலும் வெற்றிதான்.
- 1897