டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 800 விக்கெட்டுகள் என்ற தனது சாதனையை ஒருபோதும் முறியடிக்க வாய்ப்பில்லை என இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சமகாலத்தில் வெள்ளை பந்து கிரிக்கெட் போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதால் தனது சாதனையை முறியடிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், டெஸ்ட் வடிவத்தின் எதிர்காலம் குறித்து தான் நிச்சயம் கவலைப்படுவதாகவும் கூறியுள்ளார்.
இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இலங்கை அணி இந்தத் தொடரை இழந்துள்ளதாகவும், ஏனெனில் போட்டி ஈர்ப்புகள் அவர்களின் ‘நிலைத்தன்மையை’ கெடுத்துவிட்டதாகவும் முரளி சுட்டிக்காட்டியுள்ளார்.
800 விக்கெட்டுகள் என்ற எனது சாதனையை முறியடிப்பது மிகவும் கடினமானது, ஏனென்றால் தற்போது குறுகிய வடிவ கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது.
மேலும், நாங்கள் 20 ஆண்டுகள் வரை விளையாடினோம். ஆனால் இப்போது வீரர்கள் அவ்வளவு காலம் விளையாடும் வாய்ப்புகள் மிகவும் குறைவு.
தற்போது விளையாடும் இரண்டு சுழல்பந்து வீச்சாளர்களான அவுஸ்திரேலியாவின் நாதன் லயன் 530, மற்றும் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஷ்வின் 516 விக்கெட்டுகளை கைப்பற்றி பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர்.
ஒவ்வொரு நாடும் தற்போது ஆறு அல்லது ஏழு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடுகின்றன. வேறு சில நாடுகளில் அதிகம் பேர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை பார்ப்பதில்லை எனவும் முரளி குறிப்பிட்டுள்ளார்.
000
- 1176