கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து ஒற்றுமையுடன் வாழ்ந்தால் தான் அந்த குடும்ப வாழ்க்கை என்பது சிறப்பாக அமையும். அப்படி குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமைந்தால் தான் அவர்களுடைய பிள்ளைகள் சிறப்பாக வளருவார்கள். ஒரு குடும்பமே சிறப்பாக இருப்பதற்கு கணவனும் மனைவியும் தான் முக்கியமான காரணமாக திகழ்கிறார்கள்.
கணவன் மனைவிக்கு இடையே கருத்து ஒருமைப்பாடு இல்லாத பட்சத்தில் அந்த குடும்பம் நிம்மதியற்ற சூழ்நிலைக்கு போய்விடும். விநாயகர் சதுர்த்தி நாளன்று கணவன் மனைவி ஒற்றுமையுடன் வாழ்வதற்கு செய்ய வேண்டிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையை பார்ப்போம். விநாயக பெருமானுக்கு பலவிதமான வழிமுறைகளை பின்பற்றி வழிபாடு செய்வோம்.
விநாயகருக்கு 21 மலர்களை வைத்து அர்ச்சனை செய்வது, 21 இலைகளை வைத்து அர்ச்சனை செய்வது, 21 வகையான பழங்களை வைப்பது, என்று வழிபாடு செய்யும் பழக்கம் என்பது பலருக்கும் இருக்கும். அதே சமயம் விநாயகப் பெருமானை அலங்கரிப்பதற்காக பல வண்ண பூக்களை வாங்கி வந்து அலங்கரிப்பார்கள். அந்த மாதிரி பூக்களை வாங்கும் பொழுது வெள்ளெருக்கு பூவையும் வாங்கி விநாயகப் பெருமானுக்கு சூட்ட வேண்டும்.
இந்த மலரை பொறுமையாக பிரித்துப் பார்த்தோம் என்றால் அதற்கு நடுவே இரண்டு காம்புகள் ஒன்றாக சேர்ந்து இருக்கும். அந்த இரண்டு காம்புகள் தான் கணவனும் மனைவியும். அப்படி கணவனும் மனைவியும் சேர்ந்து இருக்கக்கூடிய அந்த பூவை மாலையாக தொடுத்து விநாயகப் பெருமானுக்கு சூட்டி வழிபாடு செய்தோம் என்றால் அந்த குடும்பத்தில் இருக்கக்கூடிய கணவனும் மனைவியும் என்றென்றும் ஒற்றுமையுடன் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.
54 அல்லது 108 என்ற எண்ணிக்கையில் பூக்களை பறித்து மாலையாக கோர்த்துக் கொள்ளுங்கள். இதை விநாயக சதுர்த்தி அன்று புதிதாக வாங்கி வரும் விநாயகருக்கும் போடலாம். வீட்டில் ஏற்கனவே இருக்கும் விநாயகர் சிலைக்கும் போடலாம். வீட்டில் இருக்கக் கூடிய விநாயகரின் படத்திற்கும் போடலாம். இப்படி இந்த மாலையை போட்டு முடித்து அவருக்குரிய பிரசாதங்களை நெய்வேத்தியமாக வைத்து மனதார கணவனும் மனைவியும் ஒற்றுமையாக வாழ வேண்டும், குடும்பம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று வேண்டுபவர்களுக்கு விநாயகப் பெருமானின் அருளால் அவர்கள் நினைத்தது போலவே கணவனும் மனைவியும் ஒற்றுமையுடன் வாழ்வார்கள்.
இந்த பூக்களை பறித்து தங்களால் தொடுக்க முடியாது என்னும் பட்சத்தில் விநாயக சதுர்த்தி அன்று கடைகளிலும் விற்கும் அந்தப் பூ மாலையும் வாங்கி சூட்டலாம். விநாயகப் பெருமானுக்கு நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு விதமான வழிபாட்டு முறைக்கும் ஒவ்வொரு விதமான அர்த்தம் இருக்கிறது.
- 1783