Feed Item

எங்கும் சிவமயம், எதிலும் சிவமயம், உடலும் சிவமயம், உயிரும் சிவ பயம் , ஓம் நமசிவாய…

இறந்தவர்களின் படம் தெற்கு திசை பார்த்தவாறு இருக்க வேண்டும். பூஜை அறை, படுக்கை அறை தவிர மற்ற இடங்களில் தாங்கள் விரும்பிய இடத்தில் இறந்தவரின் படத்தை மாட்டுங்கள்.

தினமும் தெய்வத்தை வணங்கிய பின் இறந்தவரின் படத்திற்கு முன்பாக நின்று, அவர்களை கூர்ந்து பார்த்து நான் நல்ல வழிப்பாதையில் நடப்பதற்கு எம்மை வழிநடத்திச் செல்லுமாறு நினைத்து வேண்டுங்கள். நடப்பது யாவும் இனிதாக நடக்கும்.

இறந்தவரின் படத்திற்கு தினமும் பூ போடுங்கள் ‌. அவர்கள் இறந்த நாள் கிழமையில் அவருக்கு பிடித்தமான காபி அல்லது தேநீர் வைப்பதை வழக்கமாக கொள்ளுங்கள்.

அமாவாசையன்று விரதம் மேற்கொண்டு வேளையோடு காகத்திற்கு சாதம் படையுங்கள். நமக்காக காத்திருக்கும் இறந்த ஆத்மாக்கள் காகத்தின் வடிவில் வந்து ஆனந்தத்தோடு உணவு எடுத்துக் கொள்வார்கள் . திருப்தியோடு மனநிறைவோடு ஆசி கிடைத்து நம்முடைய வாழ்க்கை சிறப்பாக அமையும்.

இறப்பு என்பது உடலே அன்றி ஆத்மாக்களுக்கு ஒருபோதும் இறப்பு இல்லை . அவர்கள் நம்மோடு, நம் உயிரோடு ,நம் உடலோடு கலந்து நம்மை நல்வழிப் பாதையில் அழைத்துச் செல்கிறார்கள் என்பதை உறுதியாக நினைவில் கொள்ளுங்கள்.

ஆடி அமாவாசை தை அமாவாசை மகாளய அமாவாசை பொழுது..

எள்ளும் தண்ணீரும் இறையுங்கள்.வடை பாயாசத்துடன் காகத்திற்கு படையல் வையுங்கள். முன்னோர்களின் ஆசி பெறுங்கள்.

வருடந்தோறும் திதி கொடுப்பது இறந்தவர்களின் ஆத்மாக்கள் சாந்தி கிடைத்து, அவர்களுடைய பரிபூரணமான ஆசி கிடைத்து நம்முடைய வம்சத்தைச் காக்கும்.

ஆத்மாக்களின் ஆசிபெற்று , அனைத்தும் நல்லதாக அமைந்து வாழ்க்கை சிறப்பாகி, வம்சங்கள் தழைத்தோங்கி, நல்வழியில் நடந்து நற்செயல்கள் புரிந்து பிறந்த பயனில் நிறைவு காணுங்கள்.

  • 1395