Feed Item
·
Added a news

ஆயுத இறக்குமதியாளராக இருந்த இந்தியா தற்போது ஆயுத ஏற்றுமதி நாடாக வளர்ச்சியடைந்துள்ளது.

2024 ஆம் ஆண்டு பொருளாதார ஆய்வு அறிக்கை மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இதற்கமைய, உலகின் முதல் 25 ஆயுத ஏற்றுமதியாளர்களின் பட்டியலில் இந்தியா தற்போது நுழைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2017 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பாதுகாப்புத்துறை உற்பத்தி 74,054 கோடி இந்திய ரூபாவாக பதிவாகியிருந்த நிலையில் 2023 ஆம் நிதியாண்டில் 108,684 கோடி ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

2015 ஆம் ஆண்டுக்கும் 2019 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இந்தியா உலகின் இரண்டாவது பெரிய ஆயுத இறக்குமதியாளராக மாறியது.

எவ்வாறாயினும் தற்போது முதல் 25 ஆயுத ஏற்றுமதியாளர்கள் பட்டியலில் இந்தியா இடம் பெற்றுள்ளது.

இந்தியாவின் பாதுகாப்புத்துறை, தனியார்துறை மற்றும் பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள் உட்பட, இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான பாதுகாப்பு ஏற்றுமதியை அடைய பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அண்மைய கணக்கெடுப்பு காட்டுகிறது.

மேலும், பாதுகாப்பு ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்படும் ஏற்றுமதி அனுமதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இதன்படி, 2023 ஆம் நிதியாண்டில் இந்திய அரசு வழங்கிய ஏற்றுமதி அனுமதிகளின் எண்ணிக்கை 1,414 ஆகும். இந்த எண்ணிக்கை 2024 ஆம் நிதியாண்டில் 1,507 ஆக அதிகரித்துள்ளது.

டோனியர்-228, பீரங்கி, பிரம்மோஸ் ஏவுகணைகள், பினாகா ராக்கெட்டுகள் மற்றும் லாஞ்சர்கள், ரேடார்கள், சிமுலேட்டர்கள் மற்றும் கவச வாகனங்கள் போன்ற விமானங்கள் போன்ற பரந்த அளவிலான பாதுகாப்பு பொருட்கள் மற்றும் உபகரணங்களை சுமார் 100 உள்ளூர் நிறுவனங்கள் ஏற்றுமதி செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

00

  • 436