Feed Item
·
Added a news

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் செலுத்த வேண்டிய வைப்புத்தொகை தொடர்பில் 43 வருடங்களாக திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (24) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பணத்தை மீதப்படுத்துவதற்கும், ஆதரவு வேட்பாளர்களை தடுப்பதற்கும் வைப்புத்தொகை அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ;

1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல் சட்டத்திற்கு அமைய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினால் பரிந்துரைக்கப்படும் வேட்பாளர் 50,000 ரூபாவை மட்டுமே வைப்பிலிட வேண்டும். அதேசமயம் சுயேற்சை வேட்பாளர் அல்லது வேறு ஏதேனும் கட்சி அல்லது வாக்காளர்களால் பரிந்துரைக்கப்படும் வேட்பாளர் 75,000 ரூபாவை மட்டுமே வைப்பிலிட வேண்டும்.

இந்தத் தொகையை அதிகரிப்பதற்கான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், குறித்த தொகையானது அரசியல் கட்சிகளுக்கு 2.5 மில்லியன் ரூபாவாகவும், சுயேச்சை வேட்பாளர்களுக்கு 3 மில்லியனாகவும் அதிகரிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு முன்மொழிந்தது.

இதுவொரு பொருத்தமான முன்மொழிவாக இருந்த நிலையில், கடந்த தேர்தலின் போது 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இதன்படி, 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், முதல் இரண்டு போட்டியாளர்களைத் தவிர அனைத்து வேட்பாளர்களும் செலுத்திய வைப்புத்தொகை ஒருங்கிணைந்த நிதிக்கு மாற்றப்பட்டது.

ஆனால், இம்முறைத் தேர்தலில் எந்தவொரு அடிப்படையும் இன்மையால் வேட்பாளர்களின் எண்ணிக்கை 80 அல்லது 85 ஆக இருக்கலாம்.

மேலும், வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கும் ஏனைய நடவடிக்கைகளுக்காகவும் பெரும் தொகை செலவிடப்படும்'' எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது முன்மொழியப்பட்ட திருத்தத்தை நிறைவேற்ற முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு பதிலளிக்கும் வகையில் உரையாற்றுகையிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழு சில காலத்திற்கு முன்பு இந்த முன்மொழிவை முன்வைத்த போதும், ஒரு சட்டத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு முன்னதாக பல்வேறு நடைமுறைகள காணப்படுவதாகவும் அவர் இந்தபோது சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக இந்த திருத்தத்தை மேற்கொள்வதற்கான கால அவகாசம் இல்லை எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

  • 440