Feed Item
·
Added a news

சிங்கப்பூரில் நீண்ட காலம் பிரதமராக இருந்த லீ சியென் லூங் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். 20 ஆண்டு காலம் பிரதமராக இருந்த அவரின் ஆட்சிகாலம் முடிவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், துணைப் பிரதமரும், நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் இன்றிரவு (15.05.2024) லீயிடம் இருந்து முறைப்படி ஆட்சியை பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1965 ஆம் ஆண்டு சுதந்திர நாடாக மாறியதில் இருந்து சிங்கப்பூரில் மூன்று பிரதமர்கள் மட்டுமே ஆட்சிசெய்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஆளும் மக்கள் செயல் கட்சியைச் (PAP) சேர்ந்தவர்கள் ஆவர்.

எவ்வாறாயினும், லீ மூத்த அமைச்சராக அமைச்சரவையில் நீடிப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், லீ குடும்பத்தின் நிழலில் இருந்து வெளியேறும் சிங்கப்பூரின் அரசியல் தலைமையின் பரிணாமத்தை இந்த மாற்றம் சமிக்ஞை செய்கிறது என்று அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பிரதமர் என்ற முறையில் வார இறுதியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட லீ சியென் லூங், சிங்கப்பூர் மக்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

"எல்லோரையும் விட நான் வேகமாக ஓட முயற்சிக்கவில்லை. அனைவரையும் என்னுடன் ஓட வைக்க முயற்சித்தேன்," என்று அவர் சுட்டிக்காட்டியிருந்தார். "நாங்கள் சில வெற்றிகளைப் பெற்றுள்ளோம்." என்றும் கூறியுள்ளார்.

தனது முன்னோடிகளிடம் இருந்து வேறுபட்ட வகையில் பணிகளை முன்னெடுக்க முயற்சித்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

லீ சியென் லூங் 1984 ஆம் ஆண்டு தனது தந்தை ஆட்சியில் இருக்கும்போதே பின்வரிசை உறுப்பினராக அரசியலில் இணைந்தார். 2004 ஆம் ஆண்டு தலைமையேற்கும் முன் சிங்கப்பூரின் இரண்டாவது பிரதமர் கோவின் கீழ் அவர் பதவி உயர்வு பெற்றார்.

அவரது அரசியல் வாழ்க்கையின் முதல் வருடங்கள் தவிர்க்க முடியாத தீவிரமான விமர்சகர்களை எதிர்கொண்டார். எனினும், இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக சிங்கப்பூரின் தலைவராக லீ தனது முத்திரையை பதித்தார்.

அவரின் ஆட்சியின் கீழ், சிங்கப்பூரின் பொருளாதாரம் பன்முகப்படுத்தப்பட்டு வளர்ந்ததுடன், சர்வதேச நிதி சக்தியாகவும், சிறந்த சுற்றுலாத் தலமாகவும் மாறியது.

அதன் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த 20 ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரித்துள்ளது.

பல மந்தநிலைகள், உலகளாவிய நிதி நெருக்கடி மற்றும் கோவிட் தொற்றுநோய்களின் போது நாட்டைத் திறமையாக வழிநடத்திய பெருமை லீயின் அரசாங்கத்திற்கு உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது

000

  • 470