Feed Item
Added a post 

2007 ஆம் ஆண்டுக்கு முன்னர் பிறந்த அனைவரும் தமது பெயர் வாக்காளர் இடாப்பில் உள்வாங்கப்பட்டுள்ளதா? என்பதை பரீட்சித்து பார்க்குமாறும் அவ்வாறு தமது பெயர் வாக்காளர் இடாப்பில் உள்வாங்கப்படாவிடின் உடனடியாக பதிவு செய்யுமாறும்  அறிவுறுத்திதப்பட்டுள்ளது

இது தொடர்பாக https://ec.lk/vrd என்ற இணையத்தளத்தினூடாகவோ அல்லது கிராம அலுவலரினூடாகவோ அறிய முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும்’-

“வாக்களித்தல் தனிமனித ஜனநாயக உரிமையாகும். ஆகையால் கிராம அலுவலர்களினூடாக வாக்காளர் பதிவு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பதிவு வாக்களித்தலுடன் மாத்திரமின்றி, அதற்கப்பால் பல நன்மைகளை கொண்டுள்ளதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

பதிவை உறுதிப்படுத்தல், நேர்முகத் தேர்வு, தொழில் பெறுதல், பாடசாலைகளுக்கு பிள்ளைகளை இணைத்தல் உள்ளிட்ட தேவைகளுக்கு வாக்காளர் பதிவு இன்றியமையாததாகும்.

அந்த வகையில் 2007 ஆம் ஆண்டுக்கு முன்னர் பிறந்த அனைவரும் வாக்குரிமைக்கு உரித்தானவர்களாகையாலும், அடுத்து வரும் காலத்தில் பல தேர்தல்கள் நடைபெறவிருப்பதாலும், வாக்குரிமையை பயன்படுத்தும் சந்தர்ப்பம் கிட்டுவதாலும், தாம் வாக்களிப்பதற்கான தகுதியை பெற்றுள்ளதை உடனடியாக அறிவதும் அதை உறுதிப்படுத்துவதும் அவசியமாகும் எனவும் இவ்விடயத்தில் அக்கறையீனமாக இருக்க வேண்டாம்” என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

  • 515