Feed Item
Added a post 

வீதி அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளுக்கான அபராதத்தை ஐந்து இலட்சம் ரூபாவாக அதிகரிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அதற்கான வரைவு போக்குவரத்து அமைச்சினால் சட்ட வரைவு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பேச்சாளர்  தெரிவித்துள்ளார்.

மூவாயிரத்து இருநூறு தொலைதூர சேவை பேருந்துகள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் ஒழுங்குமுறையின் கீழ் ஒழுங்குபடுத்தப்படுகின்றன, மேலும் அந்த பேருந்துகளுக்கு மேலதிகமாக, பயணிகள் பெரும்பாலும் வீதி அனுமதிப்பத்திரம் இல்லாத பேரந்துகளிலும் ஏற்றிச் செல்லப்படுகிறார்கள்.

குறிப்பாக வெள்ளவத்தை மற்றும் மருதானையை அண்மித்த பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்வதுடன், அவ்வாறான பல பேருந்து கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இவ்வாறு பிடிபடும் பேருந்துகளுக்கான தற்போதைய தோராயமான அபராதம் பத்தாயிரம் ரூபாயாகும். எதிர்காலத்தில் ஐந்து இலட்சம் ரூபாவாக அதிகரிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

 

  • 521