Feed Item
Added a post 

வண்டலூர் மிருககாட்சிசாலையில் இருந்த ஒரு சிங்கத்துக்கு திடீர் அதிர்ஷ்டம் அடித்தது.

அந்த சிங்கம் அமெரிக்காவில் உள்ள ஒரு மிருக காட்சி சாலைக்கு மாற்றப்பட்டது.

சிங்கத்துக்கோ ஏகப்பட்ட மகிழ்ச்சி. இந்தியால போட்ட சாப்பாட்டை விட சூப்பரான சாப்பாடு கிடைக்கும் என்று மனதுக்குள் குதகலம்.

மறுநாள் காலையில் உணவு தரப்படும் வேளை வந்ததும் சிங்கம் பரபரப்பாக கூண்டுக்குள் நல்ல மாமிச உணவை எதிர்பார்த்து அங்கும் இங்கும் அலைய ஆரம்பித்தது.

ஆனால் சிங்கத்துக்கு கிடைத்ததோ சில கேரட் துண்டுகள் மட்டுமே.

சிங்கம் மனதுக்குள் ஓஹோ முதலில் சாலட் தான் தருவார்கள் போலிருக்கிறது என்று நினைத்தது. ஆனால் எதுவும் வரவே இல்லை.

சிங்கம் அது எதிர்பார்ப்பிலேயே தூங்கிவிட்டது.

அடுத்த வேளையும் அதே கேரட்.

இரவு நேரத்துக்கும் அதிக கேரட்.

மறுநாள் காலையும் அதே கேரட்.

சிங்கத்துக்கு பொறுக்க முடியவில்லை. அன்று மதியம் மீண்டும் கேரட் தரப்பட்ட உடன் கோபம் வந்த சிங்கம் கேட்டது. உங்கள் ஊரில் சிங்கத்துக்கு மாமிசம் தரும் வழக்கம் கிடையாதா என்று.

அதற்கு அந்த உணவு அளிப்பவர் சிங்கத்துக்கு கட்டாயம் மாமிசம் தருவது உண்டு. ஆனால் நீ இங்கு வந்திருப்பதோ ஒரு குரங்கின் பாஸ்போர்ட்டில். உனக்கு எப்படி மாமிசம் தரமுடியும்??

எனவே தான் நாங்கள் குரங்கின் உணவை மட்டும் அளிக்கிறோம்.

சிங்கம் மயக்கம் போட்டு விழுந்து விட்டது

  • 413