Feed Item
Added a news 

இது ஒரு தொழில்நுட்பம் சார்ந்த தகவல்.

பலரும் பரவலாக அறிந்திருக்க சந்தர்ப்பம் இருக்காது. இங்கு சொல்லப்படும் கருப்பொருளை மனக்கண்ணில் கொண்டுவரும்போது இலகுவாக புரிந்துகொள்ளலாம்.

சந்திகளில் பொருத்தப்பட்டிருக்கும் "வீதி ஒழுங்கு ஒளி சைகை" (Traffic signal light) என்பது பொதுவாக குறிப்பிட்ட நிமிடங்களுக்கு ஒருமுறை மாறி மாறி வீதியில் வாகனம் செலுத்துபவர்களுக்கு சைகைகளை வழங்கி வழிகாட்டி கொண்டேயிருக்கும் என்பது எல்லோரும் அறிந்த விடயமாகும்.

முக்கியமான பெரிய சந்திகளில் இரு பக்கமும் சம நேரங்களில் இவ் ஒளி சைகைகள் மாறிக்கொண்டேயிருக்கும்.

ஆனால், இங்கு சமநிலையற்ற நிலைமையில் அதாவது ஒரு பக்கம் மட்டும் நீண்ட நேரம் பச்சை நிற சைகையாகவும் தொடர்ந்து மறுபக்கம் நீண்டநேரம் சிவப்பு நிற சைகையாகவும் இருக்கும் சந்திகளையும் வாகனம் செலுத்துபவர்கள் எவரும் எதிர்கொள்ளாமல் இருந்திருக்க மாட்டார்கள். உதாரணமாக, உள் வீதி ஓன்று வந்து தொடுக்கும் பிரதான வீதி சந்திகளை இங்கு குறிப்பிடலாம். அநேகமாக முச்சந்திகள் போல் காணப்படும் இடங்களினை இங்கு குறிப்பிடலாம். 

 உள் வீதியால் அந்த முச்சந்தி உள்ள இடத்தினை நோக்கி வந்துகொண்டிருக்கும் வாகனங்களின் செறிவு குறைவாக இருக்கும் என்பதால் அந்த பக்கம் நீண்ட நேரம் சிவப்பு நிற ஒளி சைகையாகவும், மறுபக்கம் வாகன செறிவு அதிகமாக உள்ள பிரதான வீதி என்பதால் நீண்டநேரம் பச்சையாகவும் இருக்கும் வகையில் அங்கு தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

அப்படியாயின் உள் வீதியால் வாகனம் செலுத்திவந்து பிரதான வீதியில் இடது பக்கம் திரும்புவருக்கு நீண்டநேரம் தொடர்ந்து இருக்கும் சிவப்பு ஒளி சைகை பச்சை ஒளியாக மாறிகொடுக்க சற்று அதிக நேரம் எடுக்குமல்லவா? இதற்கு தொழில்நுட்பவியலாளர் ஓர் தொழில்நுட்பத்தினை கனடாவில் கையாள்கின்றனர்.

இப்படியான இடங்களில் மின் காந்த தூண்டல் இணைப்பு நிலத்தின் கீழ் கண்ணுக்கு தெரியாதமாதிரி பதிக்கப்பட்டிருக்கும். இந்த மின்காந்த தூண்டல் இணைப்பின் செயல்பாடு என்பது வாகனம் அந்த இடத்தில் வந்து நின்று சில நொடிகளில் சைகை சிவப்பிலிருந்து பச்சைக்கு மாற்றிக்கொடுக்கும். வாகனம் அந்த இடத்திற்கு வரவில்லையானால் அந்த பக்க சிவப்பு ஒளி சைகை மாறாமல் தொடர்ந்திருக்கும்.

(Inductive Metal loop has been embedded in the pavement without visible )

இதேபோல் வாகனசெறிவு அதிகமாக இருக்கும் பெரிய சந்திகளில் நேரே வரும் வாகனங்களை மின்னொளி சைகையால் நிறுத்திவிட்டு, விசேட அம்புக்குறி சைகையால் (Left turn arrows), இடது பக்கம் திரும்பும் பல வாகனங்களுக்கு............தொடர்ந்து விவரமாக தெரிந்து கொள்ள கீழ்க்காணும் வீடியோவைப் பாருங்கள்.

  • 277