Feed Item
Added article 

நீயா நானா பாத்திடலாம்!. கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் வந்த மோதல்!.. கடைசியில என்ன நடந்தது!..

கவுண்டமணி நாடகங்களில் முக்கிய வேடங்களில் நடிக்கும்போது நாடகத்தில் சின்ன சின்ன வேலைகளை செய்து கொண்டிருந்தவர் செந்தில். கவுண்டமணி எப்படி படிப்படியாக முன்னேறினாரோ அப்படி செந்திலும் திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். ஆனால், கவுண்டமணி அளவுக்கு செந்தில் பிரபலமாகவில்லை. ஒரு கட்டத்தில் இருவரும் சில படங்களில் இணைந்து காமெடி காட்சிகளில் நடிக்க அது ரசிகர்களை கவர்ந்து அவர்களிடம் வரவேற்பை பெற்றது.

அதன் பல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் கவுண்டமணி – செந்தில் இருவரின் காமெடி காட்சிகள் தங்களின் படங்களில் இருக்குமாறு பார்த்துக்கொண்டனர். அப்படி பல படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தனர். ‘அண்ணே. அண்ணே’ என செந்தில் பேசும் ஸ்டைலையும், ‘டேய் கோமுட்டி தலையா, தேங்காய் தலையா’ என கவுண்டமணி அவரை அழைப்பதையும் ரசிகர்கள் மிகவும் ரசித்தனர்.

பல வருடங்கள், பல படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். ஒருமுறை ‘என்னால்தான் உங்கள் காமெடியை மக்கள் ரசிக்கிறார்கள். நான் இல்லையேல் உங்கள் காமெடி வேலைக்கு ஆவாது’ என்கிற ரேஞ்சுக்கு செந்தில் பேசிவிட ‘சரிடா ரெண்டு பேரும் தனித்தனியாக படம் பண்ணுவோம். பாப்போம்’ என கவுண்டமணியும் சவால் விட்டார். அதன்பின் இருவரும் பல படங்களில் தனித்தனியாக நடித்தனர்.

கவுண்டமணி ஹீரோக்களுடன் இணைந்து இரண்டாவது கதாநாயகன் போல நடிக்க துவங்கினார். எனவே, அவரை மக்கள் ரசித்தனர். ஆனால், செந்தில் தனியாக நடித்த படங்களில் அவரின் காமெடி பெரிதாக் ஒர்க் அவுட் ஆகவில்லை. எனவே, செந்தில் தனது தவறை புரிந்துகொண்டார். அதேபோல், கவுண்டமணியின் காமெடியை மக்கள் ரசித்தாலும் ‘செந்தில் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்’ என ரசிகர்கள் பேச கவுண்டமணியும் அதை புரிந்துகொண்டார்.

ஒருகட்டத்தில் கவுண்டமணியிடம் செந்தில் சரணடைந்து ‘உங்க கூட சேர்ந்து நடிச்சாதான் என்னையே ரசிப்பாங்க’ என சொல்லி, அதன்பின் அவருடன் தொடர்ந்து நடிக்க துவங்கினார்.

அதன்பின் பல படங்களில் ஒருவரும் ஒன்றாக நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தனர். இப்போது இருவருமே திரைப்படங்களில் நடிப்பதில்லை. இன்னமும் கூட அவர்களின் இடத்தை யாராலும் நிரப்பமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • 744