Feed Item
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: தடைபட்​டிருந்த சுபகாரியங்​கள் தடபுடலாக நடந்​தேறும். கையில் பணம் புரளும். பூர்​வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்​டுவீர்​கள். அதி​காரப் பத​வி​யில் இருப்​பவர்​களின் நட்பு கிட்​டும். உத்​தி​யோகம் சிறக்​கும். வியாபாரத்​தில் போட்​டிகளை தகர்ப்​பீர்​கள்.

ரிஷபம்: புது நண்​பர்​கள் அறி​முக​மாவர். முன்பு செய்த உதவி​களுக்கு இப்​போது பாராட்டு கிட்​டும். உற்​சாக​மான பேச்​சால் அனைவரை​யும் கவரு​வீர்​கள். உறவினர், நண்​பர்​கள் மத்​தி​யில் மதிக்​கப்​படுவீர்​கள். வியாபாரம், உத்​தி​யோகத்​தில் நல்ல முன்​னேற்​றம் காண்​பீர்​கள்.

மிதுனம்: குடும்​பத்​தினருடன் மனம் விட்​டுப் பேசுவீர். சேமிப்​புகள் அதி​கரிக்​கும். குலதெய்வ பிரார்த்​தனைகளை நிறைவேற்​று​வீர். வியாபாரம் திருப்தி தரும். அலு​வல​கத்​தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்​ளவும்.

கடகம்: தடைபட்​டுக் கொண்​டிருந்த சுபகாரியங்​கள் இனி தடபுடலாக நடக்​கும். நீண்​டகால நண்​பர்​கள் உங்​களுக்கு பக்க பலமாக இருப்​பார்​கள். வியாபார ரீதி​யாக பிரபலங்​களை சந்​திப்​பீர். புதிய யுக்​தி​களைக் கையாண்டு வாடிக்​கை​யாளர்​களைக் கவரு​வீர்.

சிம்​மம்: எதிர்​பார்த்த இடத்​தி​லிருந்து பணம் வரும். புதிய சிந்​தனைகள் மனதில் தோன்​றும். உடன்​பிறந்​தவர்​களின் ஆதரவு கிட்​டும். அடிக்​கடி தொல்லை தந்த வாக​னத்தை சீர் செய்​வீர். மனைவிவழி​யில் ஆதாயம் உண்டு. வியாபார ரீதி​யாக பயணம் மேற்​கொள்​வீர்.

கன்னி: மறைமுக அவ​மானம் ஏற்​படக்​கூடும். சொந்த ஊர் கோயில் நிகழ்ச்​சிகளை முன்​னின்று நடத்​து​வீர்​கள். பழைய கடன் சுமையை நினைத்து அவ்​வப்​போது நிம்​மதி இழப்​பீர். வியாபாரத்தில் லாபம் பார்க்​கலாம். அலு​வல​கத்​தில் அமைதி காப்​பது நல்​லது.

துலாம்: புது ஆடை, ஆபரணங்​கள் சேரும். உங்​களின் குறிக்​கோளை எட்​டிப்​பி​டிக்க முயற்​சிப்​பீர். குடும்​பத்​தில் கல​கலப்​பான சூழல் ஏற்​படும். வியாபாரத்​தில் நெளிவு சுளிவு​களை கற்று வெற்றி பெறு​வீர். அலு​வல​கத்​தில் மதிப்பு உயரும்.

விருச்​சிகம்: ஈகோ பிரச்​சினை தீர்ந்து தம்​ப​திக்​குள் அனுசரித்து போவீர். துணிச்​சலுடன் சில முடிவு​களை எடுப்​பீர். வியாபாரத்​தில் பழைய பாக்​கி​கள் வசூலாகும். பங்​குதா​ரரை பகைத்​துக் கொள்​ளாதீர். அலு​வல​கத்​தில் மேலதி​காரி பாராட்​டுவார்.

தனுசு: புத்​திசாலித்​தனமாக நடந்து கொள்​வீர். பழைய நண்​பர்​கள், உறவினர்​கள் உங்​கள் உதவி நாடி வரு​வர். அலு​வல​கத்​தில் உயரதி​காரியுடனான மனக்​கசப்​பு​கள் நீங்​கும். பயணத்​தால் உற்​சாகமடைவீர். பங்​குதா​ரர்​களை பகைத்​துக் கொள்​ளாதீர்​கள்.

மகரம்: எதிர்​பார்த்​திருந்த பணம் கைக்கு வரு​வ​தால் மன நிம்​மதி கிட்​டும். மனைவி வழி​யில் அந்​தஸ்து உயரும். தாயாரின் விருப்​பங்​களை நிறைவேற்​று​வீர். வியாபாரப் போட்​டிகளை எளிதாக சமாளிப்​பீர். அலு​வல​கத்​தில் மேலதி​காரி ஆதரிப்​பார்.

கும்​பம்: மனதுக்கு இத​மான செய்தி வரும். வயிற்​று​வலி சீராகும். பூர்​வீக வீடு, மனை தொடர்​பான வழக்​கில் சமரசம் ஏற்​படும். வியாபாரத்​தில் பாக்​கி​கள் வசூலாகும். பணி​யாட்​கள் ஆதர​வாக இருப்​பார்​கள். அலு​வல​கத்​தில் புதிய பத​விக்கு பரிந்​துரைக்​கப்​படுவீர்.

மீனம்: சந்​திராஷ்டமம் நடப்​ப​தால் நீங்​கள் நல்​லது சொல்​லப் போய் சிலர் தவறாகப் புரிந்து கொள்​வார்​கள். உடல் நலத்​திலும் கவனம் தேவை. வியாபாரத்​தில் பழைய பாக்​கி​கள் வசூலாகும். அலு​வல​கத்​தில் அடுத்​தவர் விஷயத்தில் தலையிடாதீர்.

  • 162