·   ·  179 posts
  •  ·  1 friends
  • 1 followers

வணக்கம்

கணவன் ஆஃபீஸ் கிளம்பினான். மனைவி சொன்னாங்க என்னங்க இனிமேல் என்னை நீங்க என் ஆகீசில விட்டுட்டு நீங்க உங்க ஆஃபீஸ் போங்க என்று சொல்ல !

கணவன் வேற வழியில்லாமல் சரி என்று சொல்லிக்கொண்டு மனைவியை தன் இரு சக்கரத்தில் அழைத்து கொண்டு போனான்.

மனைவியை வாசலில் விடும்போது அவங்க சொன்னாங்க இவர் தான் எங்க டீம் லீடர் இவருக்கு வணக்கம் சொல்லுங்க என்றாள்.

கணவன் என்னடா நம்ம ஆஃபீஸ்ல நாம் ஜெனரல் மேனேஜர் இங்க ஒரு டீம் லீட்ருக்கு வணக்கம் சொல்லனுமா என்று மனதில் நினைத்தான், ஆனால் மனைவியிடம் வம்பு எதற்கு என்று சொல்லிவிட்டு வணக்கம் சொன்னான்.

அப்புறம் அங்க இருந்த செக்யூரிட்டி ஆளுக்கும் வணக்கம் சொன்னான்.

இப்படியே ஒரு வாரம் ஓடியது, தினமும் காத்தால மனைவியை அவர் ஆஃபீஸ்ல விடுவதும் வேண்டா வெறுப்பா அங்க பார்ப்பவர்களுக்கு வணக்கம் சொல்வதும் வாடிக்கை ஆகி விட்டது.

ஒரு நாள் அப்படி மனைவியை விட்டு விட்டு கிளம்பும் போது புது செக்யூரிட்டியுடன் பழைய செக்யூரிட்டி இருந்தான். அவன் இவனை பார்த்து சொன்னான்.

" சார் , ரொம்ப நல்லவர், மிகவும் மரியாதை தெரிந்தவர் , என்ன அம்மாதான் கொஞ்சம் ஹெட் வெயிட் ஜாஸ்தி என்று சொல்வது காதில் விழுந்தது.

கணவனுக்கு இப்போ வானத்தில் பறப்பது போன்று ஒரு உணர்வு. பின்னே மனைவி வேலை செய்யும் ஆஃபீஸ்ல மனைவியை விட நல்ல பேரு வாங்குவது என்றால் சும்மாவா!

  • 684
  • More
Comments (0)
Login or Join to comment.