·   ·  194 posts
  •  ·  1 friends
  • 1 followers

வில்வத்தின் சிறப்புகள்

பல விதமாவன மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்வதை விட, ஒரு வில்வம் கொண்டு அர்ச்சனை செய்தால் அதிக பலன் கிடைக்கும் என்பார்கள்.

1வில்வ இலைகள் ஆன்மிக அதிர்வலைகளை உள்வாங்கும் தன்மை கொண்டவை. இவற்றை பூஜைக்கு பயன்படுத்திய பிறகு வீட்டிலும், நாம் பயன்படுத்தும் பணப் பைகளிலும் வைக்கும் போது தெய்வீக தன்மை அங்கும் நிறையும். பல விதமான ஆன்மிக மற்றும் மருத்துவ குணங்களைக் கொண்ட வில்வ இலை பற்றி பலரும் அறியாத முக்கியமான 15. விஷயங்கள் இதோ...

வில்வம் காய்ந்த நிலையில் இருந்தாலும் அதனை அர்ச்சனைக்கு பயன்படுத்தலாம். இதனால் சகல பாவங்களும் விலகும்.

2. ஒரு முறை அர்ச்சனைக்கு பயன்படுத்திய வில்லத்தை, மறுநாள் தண்ணீரில் சுத்தம் செய்து, மீண்டும் அர்ச்சனைக்கு பயன்படுத்தினாலும் தோஷம் கிடையாது. வில்வத்தை பறித்து ஐந்து நாட்கள் வரை பூஜைக்கு பயன்படுத்தலாம்.

3. வில்வத்தில் மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம் என பலவகை உண்டு. இவற்றில் மூன்று இதழ்கள் கொண்ட வில்வத்தையே பூஜைக்கு பயன்படுத்துகிறோம். ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் கொண்ட வில்வங்களை பயன்படுத்துவது மிகவும் சிறப்பானது.

4. மகா சிவராத்திரி நாளில் சிவ பெருமானுக்கு வில்வம் கொண்டு அர்ச்சனை செய்து, வில்வாஷ்டகம் பாராயணம் செய்து வழிபட்டால் ஏழு ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகும் என்பது ஐதீகம்.

5. ஒரு வில்வம் கொண்டு பூஜை செய்வது ஒரு லட்சம் தங்க மலர்களால் பூஜை செய்ததற்கு சமமாகும். வில்வத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள்.

6. வில்வ மரத்தை வீட்டிலும், கோவில்களிலும் வளர்ப்பதால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.

7. வில்வத்தை பறித்து ஆறு மாதம் வரை வைத்து பூஜை செய்யலாம். சிவ அர்ச்சனைகளில் வில்வ அர்ச்சனை கோடி புண்ணியம் தரக் கூடியது.

8. வீட்டில் வில்வ மரம் வளர்ப்பது ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த பலனையும், கங்கை உள்ளிட்ட புண்ணிய நதிகளில் நீராடிய பலனையும், 108 சிவாலயங்களை வலம் வந்து தரிசித்த பலனையும் தரக் கூடியது.

9. வில்வ மரத்தில் காற்றை சுவாசித்தாலோ, அதன் நிகழ் உடலில் பட்டாலோ அதீத சக்தி கிடைக்கும். முறைப்படி விரதமிருந்து வில்வ மரத்தை பூஜித்தால் அனைத்து விதமாவன நன்மைகளும் கிடைக்கும்.

10. வீட்டில் வில்வ மரம் வளர்ப்பவர்களுக்கு நரகம் ஏற்படாது. எம பயம் ஒரு போதும் அவர்களை அணுகாது.

11. வில்வம் பழத்தின் சதையை நீக்கி விட்டு, அதன் ஓடுகளை குடுவை ஆக்கி அதில் விபூதியை வைத்து பயன்படுத்துவது சிவ கடாட்சத்தை அளிக்கும்.

12. வில்வ இலையை பறிக்கும் போது பய பக்தியுடன்,

நமஸ்தே பில்வதரவே ஸ்ரீபலோதய ஹேதவே

ஸ்வர்காபவர்க ரூபாய நமோ மூர்தி த்ரயாத்மனே

ஸம்ஸ - ர விஷவைத்யஸ்ய ஸ - ம்பஸ்ய கருணாநிதே:

அர்சனார்த்தம் லுனாமி த்வாம் த்வத்பத்ரம் தத்க்ஷமஸ்வ மகே"

என்று மந்திரத்தை சொல்லிக் கொண்டே பறிக்க வேண்டும்.

13. வில்வத்தை சிவமூலிகைகளின் சிகரம் என்றும் அழைப்பார்கள். வில்வ இலையை அரைத்து பொடி செய்து காலை வேளையில் பயன்படுத்தி வந்தால் கண் பார்வை சீராகும். வில்வ இலை மனஅழுத்தங்களையும் குறைக்கும் தன்மை கொண்டதாகும்.

14. பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட வில்வம், மூக்கடைப்பு, சளி, இருமல், சைனஸ் போன்றவற்றால் ஏற்படும் தொல்லைகளை நீக்கும். பல் வலி, பல் சொத்தை, பல் கூச்சம் ஆகியவற்றையும் தீர்க்கக் கூடியதாகும்.

15. சிவ பெருமானுக்குரிய நட்சத்திரம் திருவாதிரை. இது வெப்பம் நிறைந்ததாகும். இதனால் சிவனின் உஷ்ணத்தை தணிப்பதற்காகவே வில்வத்தை அவருக்கு சமர்ப்பிக்கிறார்கள். சிவபெருமானின் இருப்பிடமான இமயமலையும் பனி நிறைந்த பகுதி என்பதால் பக்தர்களுக்கு ஏற்படும் சளி போன்ற பிரச்சனைகளை குணமாக்க வில்வம் பிரசாதமாக தரப்படுகிறது.

  • 214
  • More
Comments (0)
Login or Join to comment.