·   ·  318 posts
  •  ·  1 friends
  • 1 followers

பள்ளிக்கூடம் ஒன்றினால் பெற்றோருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம்

அன்பார்ந்த பெற்றோர்களே!

உங்களுடைய பிள்ளைகளுக்கான பரீட்சை விரைவில் ஆரம்பமாகவுள்ளது. பிள்ளைகள் சிறப்பாக பரீட்சையை எழுத வேண்டும் என்பதில் ஆர்வமாய் இருப்பீர்கள் என நம்புகின்றோம். எனினும் இந்த விஷயங்களையும் கவனத்திற் கொள்ளுமாறு பணிவாய்க் கேட்டுக் கொள்கின்றோம்.

பரிச்சையில் வெற்றிபெறாத மாணவர்களில்... ஒரு கலைஞன் இருப்பான்... அவனுக்கு கணிதம் தேவைப்படாது.

அங்கே ஒரு தொழிலதிபர் இருப்பான்... அவனுக்கு வரலாறு / இலக்கியம் முக்கியமில்லை.

ஒரு இசைஞானி இருப்பான்... அவனுக்கு இரசாயனவியல் அவசியமிறாது.

ஒரு விளையாட்டு வீரனிருப்பான்... அவனது உடல் நலனே முக்கியமன்றி பௌதீகவியல் புள்ளி முக்கியமில்லை.

பரீட்சையில் அதிக மதிப்பெண் எடுத்தால் சிறந்த பிள்ளை...!! எடுக்காவிட்டால் தரம் குறைந்த மாணவன் என்று தயவு செய்து அவர்களது தன்னம்பிக்கையை ஒரு போதும் பறித்து விடாதீர்கள்.

அவர்களுக்கு சொல்லுங்கள்.... இது வெறும் ஒரு பரீட்சை மட்டுமே. நீ வாழ்கையில் வெற்றி கொள்ள இதை விட பெரிய சவால்கள் நிறைய உள்ளன.

உன் மீதுள்ள என் அன்பு நீ பரீட்சையில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்து தீர்மானிப்பதில்லை. "என்றும் நீ என் பிள்ளை என் உயிர். இப்படி சொல்லி பாருங்கள்.

பரீட்சையில் வெல்லாத உங்கள் பிள்ளை ஒரு நாள் உலகை வெல்வான்.

வெறுமனே ஒரு பரீட்சை, அதன் மதிப்பெண் உங்கள் பிள்ளையின் கனவை, திறமைகளை அழித்து விடக்கூடாது.

மதிப்பெண் என்பது வெறும் எண் தான்...

வாழ்க்கையின் முடிவே அது அல்ல... புரிந்து புரிய வையுங்கள்...

 

  • 1182
  • More
Comments (0)
Login or Join to comment.