·   ·  156 posts
  •  ·  1 friends
  • 1 followers

நேர்முகத்தேர்வு

ஒரு கம்பெனிக்கு ஒரே ஒரு ஓட்டுநர் தேவைப்பட்டது…அதன் முதலாளி விளம்பரம் கொடுத்தார். இரண்டு பட்டதாரிகளும் ஒரு எட்டாம் கிளாஸ் படித்த இளைஞனும் நேர்முக தேர்வுக்கு வந்திருந்தனர்.

மூவரும் முதலாளி முன் அமர்ந்திருக்க, முதலாளி அவர்களை பார்த்து சொன்னார்…"

ஒரு கடத்தல் லாரி நெடுஞ்சாலையில் மிக வேகமாக சென்று கொண்டு இருந்தது.. அதற்கு பின்னால் போலீஸ் வேன் ஒன்று அந்த லாரியை துரத்திக் கொண்டு பின்தொடர்ந்து வந்தது.

இதனை தற்செயலாக கவனித்த லாரி ஓட்டுநர், வேகத்தை அதிகப்படுத்தினான். வேனும் துரத்தியது…லாரி தறிகெட்டுஓட ஆரம்பித்தது.. போலீஸ் வேனும் விடவில்லை…அதுவும் நெருங்க ஆரம்பித்தது. நடுநிசி நேரம் அது.

வேனை ஓட்டும் ஓட்டுநர் பார்வை எல்லாம்…லாரி மேலேயே இருந்தது…எப்படி திரும்பினாலும் சேஸ் செய்ய தயார் நிலையில் இருந்தார்…லாரியை ஓட்டும் ஓட்டுநர், அந்த நேரத்தில் அவர் கண்கள் எல்லாம் எதன் மேல் இருக்கும்..இதனை சரியாக கணித்து விடை கூறுபவருக்கு இந்த வேலை உண்டு"என்றார்.

முதலாம் பட்டதாரி, பின்னால் வரும் வேனை ஓவர் டேக் செய்யாமல் பார்த்து கொள்வார்…என்றார். இரண்டாம் பட்டதாரி…எப்படி., எந்த சாலையில் புகுந்து தப்பிக்கலாம் என்பதிலேயே தேடி கொண்டு குறியாய் இருப்பார்…என்றார்.

நம்ம எட்டாங்கிளாசோ, அமைதியாக இருந்தார்… இதை பார்த்த முதலாளி, என்ன தம்பி சும்மா இருக்கே, எதையாவது சொல் என்றார்…அந்த இளைஞர் சொன்னார், "சார்.. அவர் கண்கள் எங்கேயும் இருக்காது… அவர் முகத்திலேயேதான் இருக்கும் "என்றார்… முதலாளி சிரித்து விட்டு சரியான பதில் தம்பி…உனக்கு தான் இந்த வேலை என்றார்.

இப்படி புத்திசாலித்தனமாக, தைரியமாக பதில் அளிக்க தயங்காதீர்.

  • 21
  • More
Comments (0)
Login or Join to comment.