- · 1 friends
-

தாமதமாக வந்த பணம்
வியாபார விஷயமாக திருச்சிக்குச் செல்லும் ஒருவரிடம் ஒரு இளைஞன் அப்பாவின் சிகிச்சைக்கு என்று காசு வாங்குகிறான். மறு மாதம் இவர் திருச்சிக்குப் போகும்போது, அந்த இளைஞனை அவர் ஒரு ஒயின்ஷாப்பில் பார்க்கிறார். இந்த மாதிரி பொய்க்காரணம் சொல்லி, மற்றவர்களிடம் காசு வாங்கி தண்ணியடிக்கிறார்களே என்று இவர் நினைக்கிறார்.
ஆனால் மூன்று மாதங்களுக்குப் பிறகு அந்த இளைஞனிடமிருந்து மணிஆர்டர் வருகிறது.
அவன் 'அப்பாவின் சிகிச்சை நல்லபடியாக முடிந்தது. ஆனால் இன்னும் சிலகாலம் அவர் பணிக்குச் செல்ல முடியாது. ஓய்வெடுக்கவேண்டும். அதனால்நான் பகு்ிதநேர பணியாக ஒரு ஒயின்ஷாப்பில் வேலை பார்க்கிறேன். அதில் வருகிற ஊதியத்தில் சேமித்து இப்போதுதான் உங்களுக்கான பணத்தை அனுப்ப முடிந்தது. தாமதத்திற்கு மன்னித்துவிடுங்கள்' என்று கடிதமும் எழுதியிருக்கிறான்.