- · 1 friends
-

கறிவேப்பிலையின் மருத்துவ பயன்கள்
உலர்ந்த கறிவேப்பிலையை பொடி செய்து , பாலுடன் கலந்து பருகி வந்தால் , ரத்த சோகை சரியாகி விடும் . கறிவேப்பிலை இலைகள் , 10 எடுத்து அரைத்து சாறு எடுத்து , அதனுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடித்தால் , வயிற்றுப்போக்கு உடனே சரியாகிவிடும் .
கறிவேப்பிலை , 10 இலைகளை வெறும் காலையில் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் , உடல் பருமன் குறையும் . ஒரு தேக்கரண்டி டம்ளர் நீரில் கொஞ்சம் கறிவேப்பிலை , இஞ்சி , சீரகம் மூன்றையும் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் , எந்த வகையான அஜீரணம் இருந்தாலும் குணமாகும் ; வாயுப் பிரச்னையும் தீரும்
ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலை பொடியில் , தேன் கலந்து தினமும் சாப்பிட்டால் , சளி வெளியேறி விடும் . கறிவேப்பிலை , இஞ்சி அரைத்து கலக்கிய மோர் ஒரு டம்ளர் சாப்பிட்டால் , நிறைய சாப்பிட்டு வயிறு திம்மென இருந்தாலும் , செரிமானமாகி விடும் .
கறிவேப்பிலையை எண்ணெயில் போட்டு காய்ச்சி , அந்த எண்ணெயை தலையில் வந்தால் , தடவி தலைமுடிகருகருவென்று வெளரும் ; நரைமுடி வரவே வராது .
கறிவேப்பிலை துவையலை சேர்த்து வந்தால் , வாய் நீர் ஊறல் , வாய் கசப்பு , பித்தம் நீங்கி விடும் . சாப்பாட்டில் கறிவேப்பிலையை அப்படியே போடாமல் , அரைத்து சமையலில் சேர்த்தால் , முழு சத்தும் வீணாகாமல் நமக்கு கிடைக்கும் ; சமையலும் மணம் துாக்கும் .
கறிவேப்பிலையை பொடி செய்து , சாதத்தில் போட்டு நல்லெண்ணை ஊற்றி சாப்பிட , உடலுக்கு தேவையான கால்சியம் கிடைக்கும் . சாப்பாட்டில் கறிவேப்பிலையை தனியே எடுத்து துாரப் போடாமல் , மென்று சாப்பிட்டு சத்தைப் பெறுங்கள்.