·   ·  173 posts
  •  ·  1 friends
  • 1 followers

குழந்தைகளிடம் இருந்தும் கற்றுக் கொள்ளலாம்.....

ராஜஸ்தானில் நிகழ்ந்த ஒரு சம்பவம்

  • பார்மர் மாவட்ட ஆட்சியர் சிவபிரசாத் நகட்டே ஒரு கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த வழியில் சிறார்கள் சிலர் மணல் வீடு கட்டி விளையாடுவதைப் பார்த்தார்.
  • உடனே, வண்டியை நிறுத்தச் சொன்ன அவர், சிறார்கள் கட்டிய வீட்டைப் பார்வையிட்டார். வீட்டோடு சேர்த்து அவர்கள் சாலையும் போட்டிருந்தது அவரை வியப்புக்குள்ளாக்கியது.
  • அவர்களின் புத்தாக்கத்தைப் பாராட்டி ஐநூறு ரூபாய் அளித்து, தங்களின் குழந்தைப்பருவத்தை இப்படியே உயிர்ப்புடன் வைத்திருக்கச் சொல்லி அறிவுறுத்தினார்.
  • பிறகு அவர்களின் புத்தாக்கத்துக்கு பின்னாலான காரணம் அவருக்கு புரிய வந்தது. அதாவது அவர்களின் கிராமத்தில் சாலையே இல்லை. அந்தத் தேவையை விளையாட்டில் பூர்த்தி செய்திருக்கின்றனர் அந்த சிறார்கள்.
  • இந்த நிகழ்ச்சிக்கு பிறகு, மாவட்ட ஆட்சியர் அந்த கிராமத்திற்கு ஒழுங்கான சாலை வசதி செய்து தருவதாக அந்த சிறார்களிடம் உறுதியளித்தார்.
  • பிள்ளைகளும் வாழ்க்கைப் பாடங்கள் சொல்லித் தரலாம். எல்லோரிடம் இருந்தும் கற்றுக் கொள்ளுங்கள்.
  • 529
  • More
Comments (0)
Login or Join to comment.