·   ·  156 posts
  •  ·  1 friends
  • 1 followers

உலகம் இப்படித்தான் ஓடுகிறது

ஒரு பள்ளிக்கூட அதிபர் அதே பள்ளிக்கூடத்தில் பணிபுரியும் பள்ளி காவலாளியின் சகோதரியை திருமணம் செய்து கொண்டார். மச்சான் முறை உறவுக்காரராக மாறிவிட்டதால் அவருக்காக அளவுக்கதிக சலுகைகள் வழங்குவதில் ஆர்வம் காட்டினார்.

ஆசிரியர் வராத சந்தர்ப்பத்தில் இவரை அனுப்பி ' மாணவர்களுக்கு பாடம் எடுக்கச் சொல்லி ' பகுதிநேர ஆசிரியராக இவரை நியமித்தார். இப்படி காலம் போகப் போக இவரை முழு நேர ஆசிரியராகவே நியமித்துவிட்டார்.

நாட்கள் நகர அந்த அதிபர் கல்வி அமைச்சு தலைமை அதிகாரியாக பதவி உயர்ந்தார். அவரது மச்சான், காவலாளியை அவர் பாடசாலை அதிபராக பதவி உயர்த்தினார்.

இன்னும் சில நாட்கள் செல்ல, அந்த அதிபர் கல்வி அமைச்சராக பதவி உயர்ந்தார்.அவர் அவரது மச்சானை கல்வி அமைச்சு தலைமை அதிகாரியாக பதவி உயர்த்தினார்.

இப்போது காவலாளியாக இருந்த அவரது மச்சானுக்கு பெரிய அலுவலகம், ஆடம்பர கார், வேலைக்காரர்கள், அதிகாரிகள், ஆசிரியர்கள் என காபி, செய்தி தாள்கள் அவரது மேசையில் வருவதும் போவதுமாக இருந்தன.

ஒரு நாள் அவர் ஒய்யாரமாக அமர்ந்து பத்திரிகை படித்துக் கொண்டிருந்த போது இப்படியொரு தலைப்பைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

(( கல்வியமைச்சின் பணிபுரியும் ஆசிரியர்களின் சான்றிதழ்களை மீள் பரிசீலிக்க கல்வி அமைச்சர் புதிய கமிட்டி ஒன்றை நியமிக்க முடிவு செய்துள்ளார். ))

என்று அந்த தலைப்பு இருந்தது.

தன் நிலைமை அறிந்து பீதியடைந்த காவலாளி உடனே போனில் தொடர்பு கொண்டார்.

'என்ன மச்சான் இது! என் நிலை தெரியும்தானே! என்னை அம்பலப்படுத்தப் பார்க்கிறீர்களா? என்னிடம் சான்றிதழ் எதுவும் இல்லை என்பது தெரியும்தானே 'என்றார்.

அதற்கு அவரது மச்சான் கல்வி அமைச்சர் ; நீங்கள் ஒன்றும் பயப்பட வேண்டாம். அந்த விசாரணை கமிட்டிக்கு உங்களைத்தான் தலைவராக நியமிக்க போகிறேன் ' என்று சொன்னவுடன்தான் அவர் கதிரையில் அமர்ந்தார்.

  • 41
  • More
Comments (0)
Login or Join to comment.