- · 1 friends
-

இப்படியும் இருந்திருக்காங்க.....
அந்தக் காலத்தில் எகிப்திய வணிகர்களிடம் ஒரு நல்ல பழக்கம் இருந்தது.
அவர்கள் காலையில் கடையைத் திறந்ததும், கடை வாசலில் ஒரு நாற்காலியை வைத்துவிடுவார்கள்.
முதல் வாடிக்கையாளர் வந்து தங்கள் கடையில் பொருளை வாங்கிச் சென்றதும், அவர்கள் அந்த நாற்காலியை உள்ளே எடுத்து வைத்துவிடுவார்கள்.
அப்படி அடுத்த அவர்கள் கடைக்கு வந்தால், கடைக்காரர் கடைக்கு வெளியே வந்து பார்த்து, எந்தக் கடையின் முன் நாற்காலி இருக்கிறதோ அந்தக் கடையை கைகாட்டி, "எங்களது கடையில் முதல் வியாபாரம் நடந்துவிட்டது. இன்னும் அந்தக் கடையில் நடக்கவில்லை. நீங்கள் தயவுசெய்து உங்களுக்கு தேவையானதை அந்தக் கடையில் வாங்கி அவருக்கு உதவுங்கள்." என்று கூறி அவர்களை அங்கே அனுப்பி வைப்பார்கள்.
சக வியாபாரி தனது வியாபாரத்தையே துவக்காமல் இருக்கும் போது, தான் மட்டும் லாபத்தை பார்ப்பது சரியல்ல என்ற நல்ல குணம்தான் இதற்கு அடிப்படைக் காரணம்.
இதே குணத்தால்தான் இவர்களது வியாபாரமும் அந்தக் காலத்தில் செழித்து வளர்ந்தன என்கிறது வரலாறு.
- மொழியாக்கம்
(படத்தில் இருப்பது எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் எடுக்கப்பட்ட கடை ஒன்றின் பழைய புகைப்படம்.)