- · 1 friends
-

இன்றைய ராசி பலன்கள் - 7.6.2025
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். நுட்பமான சில விஷயங்களைப் புரிந்துகொள்வீர்கள். கலைத்துறையில் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். வழக்குகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். எதிர்ப்பு விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
ரிஷபம்
குடும்ப வருமானம் குறித்த சிந்தனைகள் உண்டாகும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். குழந்தைகளின் உயர்கல்வி குறித்த சிந்தனை மேம்படும். வியாபாரம் நிமிர்த்தமான அலைச்சல்கள் ஏற்படும். சமூகம் பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் பிறக்கும். பயனற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் பொறுமையுடன் செயல்படவும். ஜெயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
மிதுனம்
போட்டி விஷயங்களில் கவனம் வேண்டும். வேலையாட்களிடம் அனுசரித்து செயல்படவும். எதிலும் அலைச்சல்கள் ஏற்படும். தந்தை வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். பயனற்ற சிந்தனைகளைத் தவிர்ப்பது மன அமைதியைக் கொடுக்கும். கொடுக்கல், வாங்கல் சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கடகம்
குடும்ப உறுப்பினர்களிடத்தில் பொறுமை வேண்டும். பயனற்ற பேச்சுக்களைத் தவிர்க்கவும். திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். புதிய முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். விவேகமான செயல்கள் நன்மதிப்பை உண்டாக்கும். புதிய வீடு மற்றும் செல்வச் சேர்க்கை சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குழப்பம் விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
சிம்மம்
புதுவிதமான துறை சார்ந்த தேடல் ஏற்படும். தடைப்பட்ட காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். சிறுதூரப் பயணங்களின் மூலம் மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். தனித் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். மனதில் இருந்துவந்த சஞ்சலங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கன்னி
மனதளவில் இருந்துவந்த சஞ்சலங்கள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை உண்டாகும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். பழைய சரக்குகளின் மூலம் ஆதாயம் அடைவார்கள். அலுவலகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். தடங்கல் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
துலாம்
எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கற்பனைத் துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொழுதுபோக்கு விஷயங்களில் கவனம் வேண்டும். நண்பர்கள் வழியில் ஆதரவு ஏற்படும். பழைய பிரச்சனைகள் குறித்த சிந்தனைகள் மேம்படும். பெரியோர்களின் ஆலோசனைகளால் சில மாற்றங்கள் ஏற்படும். களிப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
விருச்சிகம்
உடன்பிறந்தவர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். வெளியூர் பயணங்களினால் நன்மைகள் ஏற்படும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் அலைச்சலுக்குப் பின்பு நிறைவேறும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். தாமதம் குறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள்
தனுசு
குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். கற்பனை சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். வியாபாரத்தில் அபிவிருத்திக்கான எண்ணங்கள் மேலோங்கும். வரவு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள்
மகரம்
ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் கூடும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் மதிப்பு மேம்படும். பயணங்களால் முன்னேற்றத்தை உண்டாக்குவீர்கள். புதிய தொழில் சார்ந்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சிக்கல் விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
கும்பம்
தம்பதிகளுக்குள் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திடீர் வரவுகளால் பணப்புழக்கம் மேம்படும். இழுபறியான சில பணிகளை முடிப்பீர்கள். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உறவினர்களின் வருகைகள் உண்டாகும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். உயர் அதிகாரிகளின் இடத்தில் மதிப்பு உயரும். சிந்தனைகளில் சில மாற்றங்கள் ஏற்படும். சாதனை வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
மீனம்
குடும்பத்தில் பொறுப்புகள் மேம்படும். பல பணிகளைப் பார்க்க வேண்டிய சூழல் ஏற்படும். வியாபாரத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். மனதளவில் சிறு சிறு குழப்பங்கள் உண்டாகும். முக்கியமான கோப்புகளில் கவனம் வேண்டும். பணிபுரியும் இடத்தில் விவேகத்துடன் செயல்படவும். உடல் ஆரோக்கியம் பற்றிய சிந்தனைகள் மேம்படும். உயர்வு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு