·   ·  166 posts
  •  ·  1 friends
  • 1 followers

இன்றைய ராசி பலன்கள் - 14.6.2025

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

செய்யும் செயல்களில் புதிய நபர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தம்பதிகளுக்குள் இருந்துவந்த சங்கடங்கள் விலகும். பழைய கடன் பிரச்சனைகள் குறையும். வருமான வாய்ப்புகளை மேம்படுத்துவீர்கள். எதிலும் துணிச்சலுடன் செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்வீர்கள். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

ரிஷபம்

பிடிவாதப் போக்கினைக் குறைத்துக்கொள்ளவும். பிள்ளைகளால் மதிப்பு உயரும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். உறவினர்கள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். பயனற்ற செலவுகளைக் குறைப்பீர்கள். மருத்துவத் துறையில் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். மனதளவில் புதிய தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள்

மிதுனம்

வியாபாரம் தொடர்பான பணிகளில் பொறுமை வேண்டும். மறைமுகமான சில விஷயங்களைப் புரிந்துகொள்வீர்கள். ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உயர் அதிகாரிகளின் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். தேவையற்ற அலைச்சலால் உடலில் சோர்வுகள் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

கடகம்

பயணங்களால் ஏற்பட்ட சோர்வுகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வியாபார வியூகங்களைப் புரிந்துகொள்வீர்கள். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். தம்பதிகளுக்குள் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். தோற்றப்பொலிவு அதிகரிக்கும். உழைப்பிற்கான மதிப்பு கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

சிம்மம்

புதிய வேலை தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வழக்கு சார்ந்த செயல்களில் சில மாற்றங்கள் ஏற்படும். திடீர் பயணம் மூலம் மனதளவில் புத்துணர்ச்சி உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் பயனற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகங்கள் உண்டாகும். இணையம் மற்றும் வர்த்தகம் தொடர்பான துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். புகழ் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

கன்னி

குடும்பத்தில் ஆதரவு மேம்படும். பூர்வீகப் பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். அரசுப் பணிகளில் சிறு சிறு அலைச்சல்கள் ஏற்படும். தன வருவாயை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். வித்தியாசமான பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். நட்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

துலாம்

குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். முதலீடு சார்ந்த எண்ணங்கள் மேம்படும். பெருந்தன்மையான செயல்களால் மதிப்பு உயரும். கால்நடை வழியில் ஆதாயம் ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். செல்வாக்கு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

விருச்சிகம்

பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைகள் தீரும். வியாபாரத்தில் பொறுமையைக் கையாளவும். உத்தியோகத்தில் மறைமுக வாய்ப்புகளை அறிவீர்கள். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். குழப்பம் விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

தனுசு

பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் மதிப்பு உயரும். தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

மகரம்

பழைய நினைவுகளால் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். உயர் அதிகாரிகளின் எண்ணங்களைப் புரிந்துகொள்வீர்கள். கலைத்துறையில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் கிடைக்கும். சமூகப் பணிகளில் சில மாற்றம் ஏற்படும். திடீர் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். எதிலும் திருப்தியற்ற மனநிலை ஏற்படும். புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

கும்பம்

தம்பதிகளுக்குள் அனுசரித்துச் செல்லவும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். நண்பர்கள் இடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வழக்கு விஷயங்களில் திருப்பங்கள் உண்டாகும். நேரம் தவறி உணவு உட்கொள்வதைத் தவிர்க்கவும். வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். மற்றவர்கள் இடத்தில் சுமுகமாகப் பழகவும். சோர்வுகள் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன்

மீனம்

பொதுக் காரியங்களில் ஆர்வம் ஏற்படும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சொத்து சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். அணுகுமுறையில் சில மாற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியப் பிரச்சனைகள் குறையும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். தாமதம் விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

  • 65
  • More
Comments (0)
Login or Join to comment.