·   ·  228 posts
  •  ·  1 friends
  • 1 followers

இதை கற்றுக் கொள்வோமா?

சில senior தம்பதிகளை பொது இடங்களில் பார்த்து இருப்போம்.

அந்நியோன்யமாக, ஒருவருக்கொருவர் அனுசரணையாக, புன்னகையோடு, உலகமே தங்கள் இல்லற உறவில்தான் இயங்குகிறது என்ற தோரணையோடு வாழ்வை அதன் போக்கில் செல்ல விட்டு

ரசித்து பயணிப்பார்கள்.

இவர்கள் உண்மையிலேயே கடவுளின் குழந்தைகள்.

பொது இடங்களில் கணவனை விட்டு கொடுக்காமலும், அதே போல மனைவியின் சுய மரியாதைக்கு பங்கம் வராமல் அரண் போல காக்கும் கணவனும் இன்றைய காலகட்டத்தில் வேற்றுலகவாசிகள்போல உணர வைப்பார்கள்.

என்ன பெரிய பிரச்னை ?வாங்க ஒரு கை பாத்துடலாம் என்று அனுசரணையோடு பக்கபலமாக நிற்கும் துணைவி கிடைத்தவர்கள் பாக்கியவான்கள்.

பஸ்ஸில் உள்ள சிறு இடத்தில், தன் தேவையை குறுக்கி கொண்டு மனைவியை செளகரியமாக அமர வைக்கும் போது, தன் கணவனை பார்த்து பெருமிதமாக புன்னகைத்து, அட ஏங்க நீங்க, நல்லா உட்காருங்க என்று ஆத்மார்த்தமாக சொல்லும்போது அது கவிதை.

உறவுகளுக்குள் ஒருமித்த உணர்வும், தோழமையும் இருந்தால், அது ஒரு

அற்புதமான சங்கீதம்.

  • 389
  • More
Comments (0)
Login or Join to comment.