- · 1 friends
-

அத்தி பூத்தாற்போல ..... விளக்கம்
பூவாமல் காய்க்காது - மின்னாமல் இடிக்காது’ என்னும் பழமொழிக்கேற்ப அத்திமரத்திலும் பூக்கள் மிக உண்டு; அந்தப்பூக்களினால் காய்கள் கிடைப்பதும் உண்டு. ஆனால், மற்ற மரத்துப் பூக்களிலிருந்து காய்கள் உண்டாவதற்கும், அத்திப்பூவிலிருந்து காய் உண்டாவதற்கும் நிரம்ப வேறுபாடு உண்டு.
அத்திப் பூவேதான் காய் - அத்திக்காயேதான் பூ - பூவும் காயும் ஒன்றே. அத்திப்பூ மொட்டுபோல் இருந்தபடியே காயாகிவிடுகிறது. முல்லை மொக்காக மொட்டாக இருந்து, பின்னர் மொட்டு உடைந்து இதழ்கள் விரிந்து மலர்ந்து விடுகிறது. அதுபோல் இல்லாமல், அத்தி கடைசி வரையும் மொட்டு போலவே உருண்டையாகக் காட்சியளிக்கிறது. அந்த ஓர் உருண்டைக்குள்ளேயே பூத்துக் காய்த்துக் கனிந்துவிடுகின்றன. எனவே, ஓர் அத்திக்காய் என்பது, பல அத்திப்பூக்களின் முதிர்ந்த மாற்றமேயாகும்.
அது பூப்பதும் தெரியாது காய்ப்பதும் தெரியாது; பூத்த மறுவிநாடியே காய்த்துவிடுவதால் யார் கண்ணுக்கும் புலப்படாது.
மிக அரிதாக நடப்பதை “அத்தி பூத்தாற்போல “ என்று சொல்லிக் கொள்வது இதனால்தான்!