·   ·  166 posts
  •  ·  1 friends
  • 1 followers

இன்றைய ராசி பலன்கள் - 20.6.2025

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். குடும்பத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். தொழில் சம்பந்தமான ஒப்பந்தங்கள் சாதகமாகும். உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். ரகசியமான செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். பகை விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

ரிஷபம்

கடினமான சூழ்நிலைகளை வெற்றிகொள்வீர்கள். பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நெருக்கடியான பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் லாபம் ஏற்படும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். சமூகப் பணிகளில் மதிப்பு உயரும். மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். வரவு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

 

மிதுனம்

சவாலான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு மற்றும் மனை வாங்குவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். வியாபாரத்தில் அலைச்சல்கள் ஏற்படும். பணி சார்ந்த சில நுட்பங்களைப் புரிந்துகொள்வீர்கள். மனதளவில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். ஜெயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

கடகம்

எதிலும் வேகத்தை விட விவேகத்துடன் செயல்படுவது நல்லது. பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். முக்கிய முடிவுகளில் நிதானம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்லவும். வியாபாரப் பணிகளில் மந்தமான சூழ்நிலை ஏற்படும். மாணவர்களுக்கு மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

சிம்மம்

விமர்சனப் பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். வியாபாரத்தில் அலைச்சல்கள் உண்டாகும். சக ஊழியர்கள் இடத்தில் கவனத்துடன் செயல்படவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும். அனுபவ அறிவினால் சில மாற்றங்கள் உண்டாகும். அனுபவம் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

கன்னி

நெருக்கடியாக இருந்துவந்த சில பிரச்சனைகள் குறையும். அலுவலகத்தில் பொறுப்புகள் உயரும். வியாபாரத்தில் சிறுசிறு மாற்றங்கள் உண்டாகும். தந்தை வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். நண்பர்களின் வழியில் ஆதாயம் கிடைக்கும். மறைவான சில விஷயங்களைப் புரிந்துகொள்வீர்கள். ஆராய்ச்சிப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். ஆதாயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன்

 

துலாம்

நெருக்கமானவர்களைப் பற்றிய புரிதல் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவங்கள் உண்டாகும். போட்டிகளில் ஈடுபட்டு திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். காப்பீடு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். வியாபாரப் பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். தெளிவு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

விருச்சிகம்

பொழுதுபோக்கு விஷயங்களால் விரயம் ஏற்படும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபார நுணுக்கங்களைப் புரிந்துகொள்வீர்கள். சமூகம் தொடர்பான புதிய கண்ணோட்டம் பிறக்கும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உடன்பிறந்தவரிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சிந்தனை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

 

தனுசு

உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் மந்தத்தன்மை உண்டாகும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் அனுகூலமாக முடியும். தாமதம் விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

மகரம்

உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுபகாரியங்களை முன் நின்று நடத்துவீர்கள். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். எழுத்து சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு கற்பனைத்திறன் மேம்படும். மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றிகொள்வீர்கள். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் 

 

கும்பம்

புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு அதிகரிக்கும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்புகள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தனவரவுகளின் மூலம் கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். ஜாமீன் விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். உத்தியோகப் பணிகளில் துரிதம் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

மீனம்

சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். நண்பர்களைப் பற்றிய புரிதல் ஏற்படும். வியாபாரத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உயர் பதவியில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்துடன் வெளியூர் செல்வதற்கான சூழல் ஏற்படும். கடன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் ஏற்படும். முயற்சி ஈடேறும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

  • 606
  • More
Comments (0)
Login or Join to comment.