·   ·  204 posts
  •  ·  1 friends
  • 1 followers

இன்றைய ராசி பலன்கள் - 8.7.2025

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் காலதாமதமாகும். சமூக பணிகளில் இருப்பவர்கள் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். வாகன பயணத்தில் விவேகம் வேண்டும். வங்கி விஷயங்களை எவரிடத்திலும் பகிராமல் இருக்கவும். பெரியோர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

 

ரிஷபம்

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுகள் மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபார பணிகளில் எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். வரவுகளில் ஏற்ற இறக்கம் உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சாதகமாக அமையும். மனதில் நினைத்த செயல்களை செய்து முடிப்பீர்கள். ஆக்கபூர்வமான நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

மிதுனம்

பிள்ளைகளால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் அமையும். பயணம் சார்ந்த எண்ணம் ஈடேறும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும். வங்கி சேமிப்பு அதிகரிக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் நீங்கும். இன்பம் நிறைந்த நாள்.

 அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

கடகம்

குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். புதிய பொருள்களால் கையிருப்புகள் குறையும். சிக்கனமாக செயல்படுவது நெருக்கடிகளை தவிர்க்கும். உத்தியோகத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. புதிய கலைகள் தொடர்பான தேடல்கள் உருவாகும். குழப்பம் விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

 

சிம்மம்

நெருக்கமானவர்களின் சந்திப்புகள் ஏற்படும். எதிர்பார்த்த சில பணிகள் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தியான சூழல் அமையும். அரைகுறையாக நின்ற பணிகளை முடிப்பீர்கள். பழுதடைந்த வாகனங்களை சீர் செய்வீர்கள். வீடு மாற்றம் குறித்த சிந்தனை உண்டாகும். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் உண்டாகும். அசதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல்

 

கன்னி

மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளியூர் வேலை வாய்ப்புகள் சாதகமாக அமையும். ஆடம்பர பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். எதையும் சமாளிக்கும் பக்குவம் ஏற்படும். தொழில் சார்ந்த ஆலோசனைகள் மூலம் மாற்றம் ஏற்படும். நண்பர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

 

துலாம்

குடும்ப விவகாரங்களை பகிர்வதை தவிர்க்கவும். வரவுக்கு மீறிய சில செலவுகள் ஏற்படும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். சகோதரர்கள் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். நண்பர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபார பணிகளில் ஆர்வம் உண்டாகும். பாசம் வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

 

விருச்சிகம்

உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். மேல்நிலைக் கல்வியில் சிறு சிறு குழப்பங்கள் உண்டாகும். பொருளாதாரத்தில் சிந்தித்து செயல்படுவது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

 

தனுசு

மனதை உருத்திய சில பிரச்சனைகள் குறையும். பிற மக்களால் ஆதாயம் அடைவீர்கள். காரசாரமான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். செய் தொழிலில் முயற்சிக்கு ஏற்ப லாபம் கிடைக்கும். தர்ம காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். நெருக்கமானவர்கள் இடத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். போட்டிகள் தொடர்பான செயல்பாடுகளில் புதிய அனுபவம் ஏற்படும். சாந்தம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

மகரம்

பாசன விஷயங்களில் இருந்து வந்த தடைகள் நீங்கும். சுபகாரியம் சார்ந்த செயல்களை முன்னின்று நடத்துவதற்கான சூழ்நிலைகள் உருவாகும். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்புகள் உண்டாகும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். விருப்பமான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். வியாபார அபிவிருத்திக்கான முயற்சிகள் அதிகரிக்கும். சிந்தனை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு

 

கும்பம்

எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். பழைய வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் ஏற்படும். பணி சார்ந்த சில தீர்க்கமான முடிவுகளை எடுப்பீர்கள். உழைப்புக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

மீனம்

மனதில் புதுவிதமான நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். பயணங்கள் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். கல்வியில் இருந்த ஆர்வமின்மை குறையும். நண்பர்களின் உதவியினால் நீண்ட நாட்களாக இருந்து வந்த கவலைகள் குறையும். வியாபாரம் சார்ந்த பணிகளில் சிந்தித்து செயல்படவும். சினம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

  • 187
  • More
Comments (0)
Login or Join to comment.