·   ·  204 posts
  •  ·  1 friends
  • 1 followers

அவசரகால சூழ்நிலைகளுக்கு மருத்துவர்கள் தயாராக இருக்க வேண்டும்

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி ரெயில் நிலையத்தில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஏற்பட்ட திடீர் பிரசவ வலி ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த ராணுவ மருத்துவர் மேஜர் டாக்டர் ரோஹித் பச்வாலா, ஹேர் கிளிப் மற்றும் பாக்கெட் கத்தி உதவியுடன் பிரசவம் பார்த்துள்ளார்.

பன்வேல்-கோரக்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்த கர்ப்பிணிப் பெண் ஜான்சி நிலையத்தில் இறக்கியபோது, அவருக்குப் பிரசவ வலி அதிகமானது. இதை அறிந்த மேஜர் பச்வாலா உடனடியாகச் செயல்பட்டு, ரெயில்வே ஊழியர்களின் உதவியுடன் நடைமேடையிலேயே பிரசவம் பார்க்க முடிவு செய்தார்.சிகிச்சைக்கான சரியான கருவிகள் இல்லாத நிலையில், தொப்புள் கொடியை இறுக்க ஹேர் கிளிப்பையும், வெட்ட பாக்கெட் கத்தியையும் பயன்படுத்தியதாக மேஜர் பச்வாலா தெரிவித்தார். இதன் பின் தாய் மற்றும் குழந்தை இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த அவசரச் சிகிச்சையை வெற்றிகரமாக முடித்த பிறகு, மேஜர் பச்வாலா தனது அடுத்த ரெயிலை பிடித்து ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றார். மருத்துவர்களாக, நாங்கள் எப்போதும் அவசரகால சூழ்நிலைகளுக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

  • 560
  • More
Comments (0)
Login or Join to comment.