·   ·  173 posts
  •  ·  1 friends
  • 1 followers

கோகுல் சாண்டல் பவுடர்

கும்பகோணத்தில் திட்டையை சேர்ந்த விவசாயக் குடும்பத்தில் பிறந்த ராஜகோபாலன் என்பவரால் பூஜை பொருட்கள், சந்தனம், ஊதுபத்தி மற்றும் பன்னீர் தயாரிக்கும் நிறுவனமாக T S.R & Co ( Thittai Srinivasan Rajagopalan & Company) துவங்கப்பட்டது...

அனைத்து பொருட்களிலும் சந்தனமே பிரதானம்.

கும்பகோணத்தில் பாதாள சாக்கடை திட்டத்தின் முன்னோடி இவரே...

1956 ல் கோகுல் சாண்டோல் டால்கம் பவுடர் அறிமுகப்படுத்தப்பட்டது ..

1965 ல் சென்னை இராமாபுரத்திலும் தொழிற்சாலை துவங்கப்பட்டது.

நிறுவனரையும், நிறுவனத்தையும் கௌரவிக்கும் வகையில் ஒரு தெருவிற்கு கும்பகோணத்தில் T.S.R பெரிய தெரு எனப் பெயரிடப்பட்டது.

இந்த பவுடரை பயன்படுத்தாதவர்கள் மிக அரிது.இந்த பவுடரை நினைத்தாலே அதன் வாசனை நம் நினைவலைகளில் வந்து செல்லும்...‌

இன்று எத்தனையோ பன்னாட்டு‌ நிறுவனங்களின் பல பவுடர்களுடன் இந்த பவுடரும் நிலைத்து நிற்பதே அதன் தரத்திற்கு சான்று.......

  • 468
  • More
Comments (0)
Login or Join to comment.