·   ·  283 posts
  •  ·  1 friends
  • 1 followers

அதிபர் நெல்சன் மண்டேலாவின் பெருந்தன்மையான குணம்

தென் ஆபிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா கூறிய உண்மைச் சம்பவம்....

'நீண்ட போராட்டத்திற்கு பிறகு நான் ஜனாதிபதியான பின், ஒருநாள் என் முதல் கட்ட பாதுகாப்புப் படையினருடன் நகரில் உள்ள ஒரு உணவகத்திற்கு சென்றிருந்தேன்.

அவரவர் தமக்கு விரும்பிய உணவுக்கு ஆர்டர் செய்துவிட்டு அமர்ந்திருந்தோம். அப்போது என் எதிர் மேசையில் ஒருவர் தனியாக தன் உணவுக்காக காத்திருந்தார்.

என் படைவீரனை அனுப்பி அவரை எம்முடன் வந்து ஒன்றாக உணவருந்தும் படி சொன்னேன். அவரும் தன் உணவுடன் எமது வட்டத்தில் அமர்ந்தார். எல்லோரும் உண்டு முடிய அவரும் புறப்பட்டார்.

அப்போது என் படை வீரனொருவன், "அந்த மனிதர் பார்க்க நோய்வாய்ப்பட்டவராக தெரிகிறார், உண்ணும் போது அவரின் கைகள் மிகவும் நடுங்கின." என்று என்னிடம் கூறினான்.

உடனே நான் குறுக்கிட்டேன். அது உண்மை அல்ல வீரனே... நான் முன்பு சிறையிலிருந்த போது இந்த மனிதர் தான் என் சிறைக்காவலராக இருந்தார். என்னை அடிக்கடி கொடுமைப்படுத்தும் போதெல்லாம் நான் கூக்குரலிட்டு, களைத்துப் போய் கொஞ்சம் நீர் அருந்த கேட்பேன்.

அப்போது இந்த மனிதர் என்னிடம் வந்து என் தலை மேல் சிறுநீர் கழித்து விட்டு செல்வது வழக்கம். அவர் தென் ஆபிரிக்க ஜனாதிபதியான என்னை இப்போது இனங்கண்டு விட்டார் போலும். நான் இப்போது அவருக்கு பதிலடி கொடுப்பேன் என்று நினைத்தே அவர் நடுங்கியிருப்பார். ஆனால் அது என்னுடைய பழக்கம் அல்ல. பழிக்குப்பழி வாங்கும் மனநிலை ஒருபோதும் ஒரு தேசத்தையோ, தனி மனிதரையோ கட்டியெழுப்பாது. அதே நேரம் சில விஷயங்களில் மனதில் தோன்றும் சகிப்புத்தன்மை பெரிய சாம்ராஜ்யங்களையே உருவாக்கும்.' என்றார் மண்டேலா.

  • 494
  • More
Comments (0)
Login or Join to comment.