·   ·  318 posts
  •  ·  1 friends
  • 1 followers

பந்தயத்தின் மிக உயர் ஒழுக்கம்

பந்தயத்தின் மிக உயர் ஒழுக்கம் என்ன?...

ஓட்டப்பந்தய வீரர் இவான் உலகிற்கு உணர்த்திவிட்டார்.

கென்யாவின் ஓட்டப்பந்தய வீரர் ஆபெல் முட்டாய் பந்தய வெற்றிக் கோட்டிலிருந்து சில மீட்டர் தொலைவில் இருந்தார்.

ஆனால் பந்தயப் பாதை குறிகளால் குழப்பமடைந்து வெற்றிக் கோட்டை அடைந்துவிட்டோம் என்று ஓட்டத்தை முடித்துக்கொண்டார்.

ஒட்டத்தில் ஆபெல்லுக்கு பின்னால் (ஸ்பானிஷ் பேசும்) இவான் பெர்னாண்டஸ் இருந்தார்.

கென்னிய வீரர் ஆபெல் குழம்பிப்போய்விட்டார் என்பதை உணர்ந்த இவான் தொடர்ந்து ஓடுமாறு ஆபெலை நோக்கி கத்த ஆரம்பித்தார். ஆபெல்லுக்கு ஸ்பானிஷ் தெரியாது. இவான் என்ன சொல்லுகிறார் என்று ஆபெல்லுக்கு புரியவில்லை.

தான் கூறுவது ஆபெல்லுக்கு புரியவில்லை என்பதை உணர்ந்த பெர்னாண்டஸ் ஆபெல்லை வெற்றிக்கோட்டை நோக்கி விரையச் செய்தார்.

இதைக் கவனித்த ஒரு நிருபர் இவானிடம், "நீங்கள் இதை ஏன் செய்தீர்கள்?" என்றார்.

அதற்கு இவான் பதிலளித்த பதில் :

"ஒரு நாள் நாம் ஒரு பக்குவமான சமுதாய வாழ்க்கை நிலைக்கு உயர்வோம் என்பது என் கனவு. அந்த சமூக அமைப்பில் நாமும் மற்றவர்களும் வெற்றி பெற வேண்டும்."

நிருபர் முன்வைத்த அடுத்த கேள்வி :

"ஆனால் நீங்கள் ஏன் கென்யாவை வெல்ல அனுமதித்தீர்கள்?"

அதற்கு இவானின் பதில் :

"நான் அவரை வெல்ல விடவில்லை; அவர் வெல்லப் போகிறார். போட்டி அவருடையது" என்றார்.

நிருபர் வற்புறுத்தி மீண்டும் கேட்டார் :

"ஆனால் நீங்கள் வென்றிருக்கலாம்!"

இவான் நிருபரைப் பார்த்து பதிலளித்தார் :

"ஆனால் நான் ஆபெல்லின் குழப்பத்தை பயன்படுத்தியிருந்தால் எனது வெற்றியின் தகுதி என்னவாக இருக்கும்? இந்த பதக்கத்தின் மரியாதை என்னவாக இருக்கும்? என் அம்மா இதைப் பற்றி என்ன நினைப்பார்?"

மதிப்புகள் தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு பரவுகின்றன.

நாம் நமது குழந்தைகளுக்கு என்ன மதிப்புகளைக் கற்பிக்கிறோம்? மற்றவர்களுக்கு நாம் எவ்வளவு ஊக்கமளிக்கிறோம்?

நம்மில் பெரும்பாலோர் மக்களின் பலவீனங்களை பலப்படுத்த உதவுவதற்குப் பதிலாக அவற்றைப் பயன்படுத்துகிறார்கள்.

இது எவ்வளவு தவறானது என்பதற்கு இவான் மிகச் சிறந்த உதாரணம்.

நம்மில் எத்தனைபேர் இவானோடு ஒத்துப்போகிறவர்களாக இருக்கிறோம்?

  • 994
  • More
Comments (0)
Login or Join to comment.