- · 1 friends
-

மாடுகளுக்கு லாடம் கட்டுதல் நல்லதா?
முதலில் மாடு கட்டும் பிடிகயிற்றைவிட சற்றுப் பெரிய கயிறை, எருதுகளின் தாடைக்கு கீழ் கொடுத்து, கயிற்றின் அடுத்த நுனியை மாட்டின் வலப் பக்கமாகக் கொண்டு வந்து, இரு நுனியையும் ஒரு இழுஇழுத்தால் எருது பக்கவாட்டில் சரிந்து படுத்துவிடும்.
எருதின் உரிமையாளர் அதன் கொம்பு மற்றும் மூக்கணாங் கயிற்றை வலுவாகப் பிடித்துக் கொள்வார்.சிறு கயிறு கொண்டு முன்னங்கால்களை முதலிலும், அடுத்து பின்னங் கால்களையும் கட்டிய பின்னர், நான்கு கால்களையும் மொத்தமாக வைத்துக் கட்டிக் கொள்ள வேண்டும்.
லாடம் கட்டுபவர் எருதுகளின் குளம்பில் ஏற்கெனவே அடிக்கப்பட்டுள்ள, தேய்ந்துபோன பழைய லாடத்தை நீக்கிய பின்னர், தன்னிடம் உள்ள சிறு கத்தியால் குளம்பை சீவி சீராக்குவார்
நாம் சதைப் பகுதியில் படாமல் நகம் வெட்டிக் கொள்வது போல, வெட்டினால் வளரும் திறன்மிக்க எருதுகளின் கால் குளம்புகள் சதைப் பகுதியில் படாதவாறு கத்தியால் செதுக்கப்பட்டு சமமாக்கப்படும்.
தொடர்ந்து, எருதுகளின் காலுக்குப் பொருத்தமான லாடத்தை தேர்வு செய்து, அதை எருதுகளின் கால் குளம்பில் வைத்து, ஆணி அடித்துப் பொருத்துவார்.
குளம்பின் சதைப்பகுதியில் ஆணி இறங்காமல் லாடத்தை லாவகமாக அடிக்க வேண்டும்..
லாடம் அடிப்பதை பார்க்கும்போது, லாடம் கட்டுபவர் எருதுகளை சித்ரவதை செய்வதுபோலத் தோன்றும், ஆனால், உண்மையில் லாடம் அடிப்பது, ஒரு ஜீவகாருண்ய செயலாகும்.
ஏனெனில், லாடம் பொருத்தப்படாத எருதுகள் கரடுமுரடான பாதைககள் மற்றும் தார்ச் சாலைகளில் தொடர்ந்து நடக்கும் போது கால் குளம்பு தேய்ந்து, காயம் ஏற்படும். காயத்தால் எருதுகள் நடக்க முடியாமல் அவதிப்படும் என்பதால், அவற்றின் கால் குளம்புகளைப் பாதுகாக்கவே லாடம் அடிக்கப்படுகிறது.
எருதுகளுக்கு லாடம் கட்டுவது என்பது எளிதான செயல் கிடையாது. மிக நுட்பமாக செய்ய வேண்டிய பணி. சிறிது பிசகினாலும் எருதுகளின் கால்களை ஆணிகள் பதம் பார்த்துவிடும்