·   ·  260 posts
  •  ·  1 friends
  • 1 followers

கொள்ளினை உணவில் சேர்த்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்

தினமும் காலையில் மற்ற எந்த உணவை சாப்பிடுவதற்கு முன்பாக வெறும் வயிற்றில் முளைவிட்ட கொள்ளு அல்லது கொள்ளை கொண்டு செய்யப்பட்ட சூப் அருந்துவதால் செரிமான பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.

தினமும் கொள்ளினை உணவில் சேர்த்து வருபவர்களின் உடலில் தேங்கியுள்ள கொழுப்புகள் அனைத்தும் கரையும். தினமும் சிறுதளவு கொள்ளினை ஊறவைத்து வெறும் வயிற்றில் உண்டு வந்தால் உங்களின் உடல் எடை விரைவில் குறையும் மேலும் உங்களுக்கு கட்டுடல் கிடைக்கும்.

கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும். வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மாதாந்திர ஒழுக்கை சரிப்படுத்தும்.

பிரசவ அழுக்கை வெளியேற்றும்...

கொள்ளு பருப்பை வறுத்து பொடி செய்துகொண்டு, ஒரு டம்பளர் தண்ணீர் கொதிக்கவைத்து அதில் ஒரு டீஸ்பூன் கொள்ளு பவுடர் மற்றும் சீரகத்தை போட்டு நன்றாக கொதிக்கவைத்து மறுநாள் காலை பருகி வர ஒரே வாரத்தில் 5 கிலோ உடல் எடை குறைவதை உணரமுடியும்.

கொள்ளு சூப் அல்லது கொள்ளு தானியங்களால் செய்யப்பட்ட உணவுகளை தினமும் ஒரு முறை அல்லது இரண்டு நாளைக்கு ஒரு முறை நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்டு வருவதால் அவர்களுக்கு நார்ச்சத்து அதிகம் கிடைக்கப் பெற்று, அவர்களின் ரத்தத்தில் இன்சுலின் சுரப்பை அதிகரித்து சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. எனவே கொள்ளு தானிய உணவுகளை நீரிழிவு நோயாளிகள் தாராளமாக சாப்பிடலாம்.

  • 717
  • More
Comments (0)
Login or Join to comment.