- · 1 friends
-

சைவ உணவுகளை விரும்புவோருக்கு சொர்க்கபுரியாக உள்ள இந்தியாவின் பலிட்டனா நகரம்
அசைவ உணவுகளுக்கு தடை
- உலகில் அசைவ உணவுகள் தடை செய்யப்பட்ட ஒரே ஒரு நகரம் இந்தியாவில் தான் உள்ளது.
- அசைவ உணவுகளின் சுவை அதிகம் என்பதால் இதனை உண்பவர்களும் அதிகம்.
- உலகின் பெரும்பாலான நாடுகளில் அசைவ உணவுகள் மக்களின் ஃபேவரிட் உணவுகளில் ஒன்றாக இருந்து வருகிறது.
- அசைவ உணவுக்கு இணையாக சைவ உணவுகளை விரும்பி சாப்பிடுவோர் உள்ளனர்.
- அவர்களுக்காகவே நடத்தப்படக்கூடிய ஏராளமான உணவகங்கள் ஆண்டுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் வருமானத்தை ஈட்டுவதாக உள்ளன.
- இந்தியாவின் குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள பலிட்டனா என்ற நகரம் ஆகும். இங்கு அசைவ உணவுகள் முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளன.
- 2014ஆம் ஆண்டு 200 ஜெயின மதத் துறவிகள் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து அங்கு சுமார் 200க்கும் அதிகமான இறைச்சிக் கடைகள் மூடப்பட்டன.
- தொடர்ந்து போராட்டங்கள் வெடித்த நிலையில் ஜைனமத உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து அரசு, பள்ளிட்டனா நகரத்தில் இறைச்சி கடைகளுக்கு முழுமையாக தடை விதித்துள்ளது.
- இந்த நகரத்தில் ஏராளமான சைவ உணவுகள் வகை வகையாக கிடைக்கின்றன. சைவ உணவுகளை விரும்புவோருக்கு பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள பலிட்டனா சொர்க்கபுரியாக மாறி வருகிறது.