- · 1 friends
-

சமான முத்திரை
எல்லா பிரச்னைகளுக்கும் ஒரு முத்திரை உண்டு.
சமான முத்திரை.
ஐந்து விரல்கள் ஐந்து பஞ்ச பூதங்களை குறிக்கும்.
மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம். இதனால் கட்டப்பட்டதுதான் நம் உடல்.
பஞ்ச பூத விகிதாசரத்தில், ஏதேனும் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டால் அணு அடுக்குகள் சீர்குலைந்து உடற் பிரச்னையாக மாறும். சுருக்கமாக இந்த விளக்கம் போதும்.
மண் குறைந்தால் தசை எலும்பு வலுவிழக்கும். நீர் குறைந்தால் சரும வறட்சி,தாகம், வயதான தோற்றம், Skin problems.
நெருப்பு குறைந்தால் உடல் வெப்பம் அதிகரிக்கும். ஹார்மோன் குறைபாடு.
வாயு மற்றும் ஆகாயம் பூதங்கள் குறைந்தால் உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்னைகள்.
குறைந்தால் மட்டுமல்ல, அதிகமானாலும் பிரச்னைதான். அது தனி List.
இந்த பஞ்ச பூதங்களையும் சமநிலையில் வைக்கவே சமான முத்திரை.
எப்படி செய்வது ? .............. Simple.
படத்தில் காட்டியபடி ஐந்து விரல்களை குவிக்க வேண்டும் கட்டை விரல் நுனியை மற்ற நான்கு விரல்களின் நுணிகள் தொட்டு கொண்டு இருக்கும்படி வைக்க வேண்டும்.
தரையில் அமர்ந்து செய்யலாம். நாற்காலியில் முதுகு தண்டு நிமிர்ந்த நிலையில் அமர்ந்து, பாதங்களை தரையில் பதித்தபடி செய்யலாம். நின்ற நிலையில் வேண்டாம்.
10 முதல் 20 நிமிடங்கள் வரை செய்யலாம்.
என்ன பலன்கள் ?
1)உடல் மற்றும் மன சக்தி அதிகரிக்கும்.
2) அனைத்து உறுப்புகளும் சிறப்பாக இயங்கும்.குறிப்பாக மூளை சுறுசுறுப்படையும்.
3) உடலின் எந்த பகுதியாவது வலி இருந்தால், வலி குறைவதை உணரலாம்.என் அனுபவமும் கூட.
4) குறிப்பாக வயிறு, தோள்பட்டை, முழங்கை, முன்கை, உள்ளங்கால், தொடை ஆகிய பகுதிகளில் ஏற்படும் வலி சரியாகும்.
5) வேலைச்சுமை காரணமாக ஏற்படும் அலுப்பு, முதுகு வலி, கழுத்து வலி சரியாகும்.
6) மாணவர்களுக்கு அதிகாலையில் செய்தால் மனதில் உற்சாகம், தன்னம்பிக்கை, மன உறுதி போன்ற நல்லுணர்வுகள் இயல்பாகும்.
7) ஆண்களுக்கு விந்தணு குறைபாடு நீங்கும்.தொடர்ச்சியாக மூன்று மாதம் செய்ய வேண்டும். தினந்தோறும் காலை, மாலை செய்து வர நல்ல மாற்றம் உண்டாகும்.