·   ·  156 posts
  •  ·  1 friends
  • 1 followers

27 பேர் மட்டுமே வசிக்கும் நாடு

  1.    மொத்தமே 27 பேர் மட்டுமே வசிக்கும் ஒரு நாட்டில் அவர்களுக்கென சொந்தமாக கால்பந்தாட்ட அணி மற்றும் ராணுவம் உள்ளதை நம்ப முடிகிறதா?
  2.    ஆனால் அப்படி ஒரு நாடு இன்றளவிலும் செயல்பட்டு வருகிறது.
  3.    பிரிட்டனுக்கு 10 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு கடல் பகுதியில் அமைந்துள்ள சீலேண்ட் (Sealand) என்ற நாடு தான் அத்தகைய ஆச்சரியத்தை கொடுக்கும் நாடாக உள்ளது.
  4.    இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மன் படைகளை எதிர்த்து போராடுவதற்கு இங்கிலாந்து சீலேண்டை போர்படை தளமாக பயன்படுத்தியது.
  5.    1967ம் ஆண்டு ராய் பேட்ஸ் என்பவர் இந்த கடல் தளங்களில் ஒன்றை கைப்பற்றி அதை சீலேண்ட் என்ற பெயரில் சொந்த நாடாக அறிவித்தார்.
  6.    அன்று முதல் பேட்ஸின் குடும்பம் அங்கு அரச குடும்பமாக உள்ளது. ஒரு சிறிய கட்டிடம் மற்றும் அதன் மேல்பகுதியில் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு போதுமான தளத்துடன் உள்ள சீலேண்டிற்கு தனி பாஸ்போர்ட், நாணயம், கொடி போன்றவை உள்ளன.
  7.    மொத்தமே 550 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டதாக இந்த நாடு உள்ளது. இங்கு மொத்தமே 27 பேர் மட்டுமே வசிக்கிறார்கள்.
  8.    அந்த நாட்டிற்கு சொந்தமாக ராணுவம் மற்றும் கால்பந்தாட்ட அணி உள்ளது. மக்கள் இங்கு ஆங்கிலத்தில் பேசுகிறார்கள்.
  9.    இங்கு சீலேண்ட் டாலர் நாணயம் நடைமுறையில் உள்ளது. ஆனால் இந்த நாணயத்தை வெளிநாட்டில் பயன்படுத்த முடியாது.
  10.    இந்த நாடு பிரச்சனைக்குரிய ஒன்றாக இருந்து வருகிறது. அதாவது சீலேண்ட் பிரிட்டனின் ஆட்சிக்கு கீழும் வராது,
  11.    அதே போன்று தன்னை சுயாதீனமாக நாடு என்று சீலேண்ட் அறிவித்துக் கொண்டாலும் மற்ற உலக நாடுகள் இதனை ஒரு தேசமாக இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை.
  • 33
  • More
Comments (0)
Login or Join to comment.